search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry Driver"

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள நவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 42) லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர்.

    திருப்பதி குடும்பத்துடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் திடீரென தான் மறைத்து கொண்டுவந்த கேனில் இருந்த மண்எண்ணையை மனைவி, 2 மகள்கள், மகன் மீது ஊற்றினார். பின்னர் அவர் மீதும் ஊற்றிக் கொண்டு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் தடுத்தி நிறுத்தினர். அங்கு வந்த தனி துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர் திருப்பதியிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது 4 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை திட்டத்தின் கீழ் கட்டிய வீட்டை எனது அண்ணனிடம் ரூ.2 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணம் பெற்றேன். தற்போது அந்த பணத்தை முழுவதுமாக திருப்பி செலுத்திய பின்னரும் வீட்டின் பத்திரத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார்.

    இது குறித்து கேட்ட போது மேலும் ரூ.10 லட்சம் தரும்படி கூறி வீட்டையும் தன் பெயரில் மாற்றி கொடுக்குமாறு மிரட்டி வருவதோடு தற்போது வீட்டை பூட்டி விட்டு எங்களை வெளியேற்றி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டு தரும் படி கூறினார்.

    இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கபடும் மேலும் அந்த பகுதி அதிகாரிகளிடம் கூறி வீட்டை திறக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார்.இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    குடும்பத்துடன் லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி டிரைவர், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட முயற்சி செய்ததால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    மோகனூர் அருகே உள்ள செவந்திப்பட்டி பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவர் நேற்று தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்த கிருஷ்ணன், திடீரென 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீசாருக்கு உத்தரவிட்டனர். இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக பிரதான வாயில் அருகே படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து விசாரணைக்காக ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணன் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ம் ஆண்டு ராமனுஜம் வகையறாகளிடம் இருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ம் ஆண்டு நிலஅளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.

    எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால், நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும், சிவில் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார்.

    நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று 25 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இவ்வழக்கை அரசு அப்பீல் செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்சினையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அதில் கூறி இருந்தார். #tamilnews
    திண்டிவனத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்து அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    பண்ருட்டியில் இருந்து கத்தரிக்காய் லோடு ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு மினிலாரி புறப்பட்டது. இந்த லாரியை சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சலீம்(வயது 35) ஓட்டி வந்தார். அந்த லாரி திண்டிவனம் கருணாவூர்பேட்டை புறவழிச்சாலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது.

    அப்போது லாரியை சாலையோரம் நிறுத்திய சலீம் கீழே இறங்கி சென்னையில் உள்ள தனது லாரி உரிமையாளரிடம் செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் சலீமிடம் திண்டிவனத்துக்கு எப்படி செல்லவேண்டும் என்று பேச்சு கொடுத்தனர். அதற்கு எனக்கு வழி தெரியாது என்று சலீம் கூறினார்.

    திடீரென அந்த மர்ம மனிதர்கள் சலீமை தாக்கினர். உன்னிடம் உள்ள பணத்தை கொடு, இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். பணம் கொடுக்க முடியாது என்று சலீம் கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியால் சலீமை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து சலீமின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.16 ஆயிரத்து 500 பணத்தை அந்த மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திண்டிவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பலத்த காயம் அடைந்த சலீமை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சலீமை தாக்கி கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    சேலத்தில் லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் மேட்டூர், கருப்பு ரெட்டியூர் அருகே உள்ள கும்புரான் காடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 34). லாரி டிரைவர். இவர் நேற்று சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கவுண்டனூர் என்ற இடத்தில் லாரியை ஓட்டி வந்து நிறுத்தினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஹரிகரனை மிரட்டி பணத்தை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூர் மாவட்டம் கனகையம்பாளையம், கிழக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் என்கிற மதன் (30), திருப்பூர் விக்னேஸ்வரர் நகரை சேர்ந்த பூபதி (23), திருச்செங்கோடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த குப்புசாமி என்கிற சதாசிவம் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மதன் மீது தாராபுரம், பழனி டவுன், சூலூர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது.

    இதுபோல் சங்ககிரி, கலியனூர் பிரிவு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் முருகேசன் (48)கீழே இறங்கியபோது அவரை 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இந்த 6 பேர் கும்பலை சங்ககிரி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் டி.வியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வட்டவிளையைச் சேர்ந்தவர் மாரிக்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி பிரியதர்ஷனி(வயது23).இவர்களுக்கு 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. 

    மாரிக்குமார் அவரது மனைவி பிரியதர்ஷனி ஆகி யோர் இரவு வீட்டின் மாடியில் டி.வி. பார்த்து விட்டு கீழ் தளத்தில் உள்ள அறையில் வந்து தூங்கினார்கள். காலை கண்விழித்து பார்த்த  போது வீட்டின் மாடி கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேச் சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    பீரோவில் இருந்த 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் டி.வி.யையும் மர்ம நபர்கள் தூக்கிச் சென்றிருந்தனர். திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1 1/2லட்சமாகும். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை சம்பவம் குறித்து பிரியதர்ஷனி கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இன்று அதிகாலை காவிரி ஆற்றுக்குள் லாரி பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் லாரியில் இருந்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #CauveryRiver
    குமாரபாளையம்:

    கோவையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று, நாமக்கல் மாவட்டம் வழியாக சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது.

    இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சித்தேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவிரி ஆற்று பாலத்தில் லாரி வந்தபோது, திடீரென 23-வது பக்கவாட்டு தூணை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் பாலத்தின் கைப்பிடி சுவர் மட்டும் 40 அடி நீளத்திற்கு உடைந்தது.

    காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் லாரி, ஆற்றுக்குள் பாய்ந்த வேகத்தில் அப்படியே நீருக்குள் முழுவதும் மூழ்கியது. அதன் பாகம் எதுவும் வெளியே தெரியவில்லை. இந்த பாலத்தின் ஒருபுற பகுதி ஈரோடு மாவட்ட எல்லைக்குள்ளும், மறுபுற பகுதி நாமக்கல் மாவட்ட எல்லைக்குள்ளும் அமைந்துள்ளது.

    இதனால் தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பாலத்தில் ஏற்பட்டு உள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆற்றுக்குள் பாய்ந்த லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த பணியில் ஆயுதப்படை போலீசார், சித்தோடு, பாவானி, குமாரபாளையம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக பாலத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த பாலத்தின் அருகே மற்றொரு பாலம் உள்ளது. சேலத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய இந்த பாலம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

    அதுபோல் குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், பவானி தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினரும் பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் ஆற்றுக்குள் பாய்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குமாரபாளையம், பவானி, சித்தோடு, ஈரோடு, திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ரப்பர் படகை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    இதனிடையே லாரியின் டீசல் பாகம் உடைந்து குபு, குபுவென டீசல் வெளியேறி ஆற்று வெள்ளத்தில் பாய்ந்தது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் லாரியில் இருந்தவர்களின் கதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    ஆகவே, போலீசார், காவிரி கரையோரம் வசிக்கும் மீனவர்களின் உதவியை நாடினார்கள். மீனவர்கள் லாரி விழுந்த பகுதியில் மூழ்கினார்கள். ஆனால், ஆற்றில் நீரின் இழுப்பு விசை அதிகமாக இருந்ததால் அவர்களால் ஆற்றின் அடிப்பகுதி வரை செல்ல முடியவில்லை.

    நீரில் மூழ்கிய அவர்கள் எந்த ஊரு லாரி? என்பது குறித்தும், வண்டி எண்? குறித்தும் அடையாளம் கண்டனர். இந்த லாரி பூந்தமல்லியை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மகாலட்சுமி கார்கோ சர்வீஸ் என்று எழுதப்பட்டு இருந்தது. வண்டி எண். டி.என்.12, இசட்-3208 என்பது தெரியவந்தது.


    இதனை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து 2 பெரிய ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, அதன் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்கள் நீரில் மூழ்கி கிரேன் கம்பிகளை லாரியில் மாட்டினார்கள். பின்னர் லாரியை வெளியே தூக்கியபோது, ஒவ்வொரு பாகங்களாக உடைந்து வந்தது. இதனால் லாரியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. கடும் போராட்டத்திற்கு பிறகு ஒரு கிரேன் மூலம் லாரி பாதி அளவுக்கு நீரின் மேலே தூக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே லாரியில் இருந்தவர்களின் கதி என்ன? என்று தெரியாததல் பரிசல்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. #CauveryRiver
    டெல்லியில் வழிப்பறி கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட லாரி டிரைவர் குடும்பத்துக்கு பெண் போலீஸ் ஒருவர் தனது சம்பளத்தை வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #DelhiCop #DonateSalary
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர் எஸ் புரா பகுதியில் உள்ள புளோரா கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் மான்சிங். லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் மான்சிங் டெல்லியில் இருந்து காஷ்மீர் நோக்கி லாரியில் வந்து கொண்டிருந்தார். ஜகல்புரி பகுதியில் வந்தபோது ஒரு கும்பல் அவரை வழிமடக்கியது. அவர் வைத்திருந்த பணத்தை பறித்த அந்த கும்பல் அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, வழக்கை விசாரித்து வந்த அந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு லாரி டிரைவர் குடும்பத்தை நினைத்து தூக்கம் வரவில்லை. தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தார்.



    ஒரு நாள் மான்சிங் குடும்பத்தினரிட்ம் பேசிய அஸ்லான் கான் தனது சம்பளத்தில் இருந்து மாதம் ஒரு தொகையை நிதி உதவி அளிப்பதாக உறுதியளித்தார். அரசிடம் இருந்தும் வேண்டிய உதவிகளை பெற்றுத் தருவதாக கூறினார்.

    இதையடுத்து, கடந்த பிப்ரவரி முதல் இன்று வரை மான்சிங் குடும்பத்திற்கு தனது சம்பளத்தில் ஒரு பாதியை நிதி உதவியாக வழங்கி வருகிறார். இதனால் மான்சிங்கின் பெண் குழந்தைகள் படிப்பு தடைபடாமல் தொடர்கிறது.

    வழிப்பறி கும்பலால் கொல்லப்பட்ட லாரி டிரைவர் குடும்பத்துக்கு பெண் போலீஸ் ஒருவர் நிதி உதவி அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #DelhiCop #DonateSalary
    மீஞ்சூர் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    தென்காசியை சேர்ந்தவர் சாமுவேல், லாரி டிரைவர்.இவர் கடந்த 1-ந் தேதி மீஞ்சூரில் இருந்து கும்மிடிபூண்டிக்கு லாரியில் நிலக்கரி ஏற்றி வந்தார். பொன்னேரி நெல் காஸ்ட் கம்பெனி அருகில் வந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் லாரியை வழிமறித்து டிரைவர் சாமுவேல், கிளீனர் இம்மானு வேலை தாக்கி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து டிரைவர் சாமுவேல் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்த அருண், பொன்னேரியை சேர்ந்த ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் தாய்மாமன் உள்பட 3 பேர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தனர். மேலும் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது48). லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி அவரது வீட்டு வாசல் முன்பு வெட்டிக்கொல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது மனைவி சித்ராவும் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட சேட்டுவின், தாய்மாமன் அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் காந்தி (54), இவருடைய உறவினர் பாபு(27), பாபுவின் நண்பர் சென்னையை சேர்ந்த சக்தி(24) ஆகிய 3 பேர் சேட்டு கொலை தொடர்பாக காளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வினோத்திடம் சரண் அடைந்தனர். உடனே கிராம நிர்வாக அலுவலர் 3 பேரையும் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காந்திக்கும், சேட்டுக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல், காந்திக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடை அமைத்ததை தடுத்தது, சேட்டுவின் மகள் திருமண பத்திரிக்கையில் காந்தியின் பெயர் போடாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சேட்டுவுக்கும், காந்திக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்த முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டம் தீட்டியதும், இதில் காந்தி முந்திக்கொண்டு கூலிப்படை உதவியுடன் சேட்டுவை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில் சேட்டுவை கொலை செய்ததற்கு பணம் வாங்குவதற்காக கூலிப்படையை சேர்ந்த ஒரு வாலிபர் மணல்மேடு பகுதிக்கு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மணல்மேட்டில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேடு பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், கும்பகோணம் சாக்கோட்டை மருதாநல்லூரை சேர்ந்த கார்த்தி (29) என்பதும், அவர் சேட்டை கொலை செய்த கூலிப்படையை சேர்ந்தவரில் ஒருவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காந்தி, பாபு, சக்தி, கார்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சேட்டு கொலை வழக்கு தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
    ×