search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai Collector Office"

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள நவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 42) லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர்.

    திருப்பதி குடும்பத்துடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் திடீரென தான் மறைத்து கொண்டுவந்த கேனில் இருந்த மண்எண்ணையை மனைவி, 2 மகள்கள், மகன் மீது ஊற்றினார். பின்னர் அவர் மீதும் ஊற்றிக் கொண்டு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் தடுத்தி நிறுத்தினர். அங்கு வந்த தனி துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர் திருப்பதியிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது 4 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை திட்டத்தின் கீழ் கட்டிய வீட்டை எனது அண்ணனிடம் ரூ.2 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணம் பெற்றேன். தற்போது அந்த பணத்தை முழுவதுமாக திருப்பி செலுத்திய பின்னரும் வீட்டின் பத்திரத்தை திருப்பி கொடுக்க மறுக்கிறார்.

    இது குறித்து கேட்ட போது மேலும் ரூ.10 லட்சம் தரும்படி கூறி வீட்டையும் தன் பெயரில் மாற்றி கொடுக்குமாறு மிரட்டி வருவதோடு தற்போது வீட்டை பூட்டி விட்டு எங்களை வெளியேற்றி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டு தரும் படி கூறினார்.

    இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கபடும் மேலும் அந்த பகுதி அதிகாரிகளிடம் கூறி வீட்டை திறக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தார்.இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    குடும்பத்துடன் லாரி டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை:

    செங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 22). இவர் சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தபோது சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த நிவேதமணி (20) என்பவரை காதலித்து உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்துள்ளனர்.

    தற்போது நிவேதமணி 8 மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு செங்கத்திற்கு வந்த ராஜேந்திரன் அதன் பின்னர் நிவேதமணியை தொடர்பு கொள்ளவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த நிவேதமணி செங்கத்திற்கு வந்து ராஜேந்திரனின் பெற்றோரிடம், அவரை பற்றி கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் எதுவும் கூறாமல் நிவேதமணியை வெளியே அனுப்பி விட்டனர். இதுகுறித்து நிவேதமணி செங்கம் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து அவர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தார். ஆனால் தேர்தல் விதி முறைகள் நடைமுறையில் உள்ளதால் கலெக்டரை சந்திக்க முடியாது என அங்கிருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதையடுத்து நிவேதமணி திடீரென கலெக்டர் அலுவலக வரவேற்பறை வளாகத்தின் முன்பு வெளியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதைக்கண்ட போலீசார் நிவேதமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

    ×