search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry Driver"

    • திருமங்கலம் அருகே லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

    திருமங்கலம்

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாபு(வயது26). லாரி டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டைக்கு இன்வெர்ட்டர் பேட்டரிகளை ஏற்றி வந்தார்.

    அப்ேபாது நிறுவனம் மூடப்பட்டிருந்ததால் லாரி தொழிற்பேட்டை பகுதியில் நிறுத்தினார். பின்னர் சிவபாபு, கிளீனர் சூரஜூடன் சாப்பிடுவதற்காக கூத்தியார்குண்டு சென்றார்.சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது 2 பேரையும் வழிமறித்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.5 ஆயிரம் ெராக்கம், 2 செல்போன்களை பறித்து சென்றது. இந்த தாக்குதலில் சிவபாபு, சூரஜ் ஆகியோர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

    அதில் லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்தது கூத்தியார்குண்டை சேர்ந்த கண்ணன் மகன் ராஜலிங்கம்(21), ராஜேந்திரன் மகன் விஜயராஜா(27), முருகன் மகன் ராஜவேலு(27), கணேசன் மகன் பிரபாகரன்(27) என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • நாகராஜ் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த கே.ஆர்.பாளையம் கே.கே.நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (35). லாரி டிரைவர். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நாகராஜிக்கு மதுப்பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் சம்பவத்தன்று இரவு நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதைப்பார்த்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

    இதையடுத்து விஜயலட்சுமியும், அவரது மகள்களும் லீலாவதி என்பவர் வீட்டில் இரவு தூங்க சென்றனர். மறுநாள் மகள் வீட்டிற்கு வந்தபோது நாகராஜ் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து விஜயலட்சுமி சித்தோடு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துரைசிங்கம், சந்திரசேகரன், சரவணன் ஆகிய 3பேரும் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்கள்.
    • சமையல் பொருட்கள் வாங்கியதில் ஒருவருக்கொருவர் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் துரைசிங்கம் (வயது 27). அதுபோல் சிவகங்கை சோழபுரத்தை சேர்ந்த ராமு என்பவரது மகன் சந்திரசேகரன் (32). கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் ( 21 ). இவர்கள் 3பேரும் காரணம்பேட்டை அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டும் வருகிறார்கள். இதில் சமையல் பொருட்கள் வாங்கியதில் ஒருவருக்கொருவர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சந்திரசேகர் மற்றும் சரவணன் ஆகியோர் துரை சிங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் துரைசிங்கத்தை இருவரும் பலமாக தாக்கினார்கள். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து துரைசிங்கம் பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகரன் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நெல்லை சுத்தமல்லியை சேர்ந்தவர் பிரபு திருநங்கையான இவர் நேற்று ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
    • பிரபு மற்றும் அவருடன் வந்தவர்கள் லாரியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை சுத்தமல்லியை சேர்ந்தவர் பிரபு ( வயது 35). திருநங்கையான இவர் நேற்று ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

    கொலை

    அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த கொலை குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விசாரணையில் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்கு ளத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்குமார் என்பவரை பிரபுவை கொலை செய்தது தெரியவந்தது.

    டிரைவர் கைது

    இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசர் அவரிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    ரெட்டியார்பட்டி நான்கு வழிப்பாதையில் எனது லாரியை நிறுத்தி விட்டு நானும், லாரி கிளீனரும் டீ குடிக்க சென்றோம். அப்போது அங்கு பிரபு மற்றும் அவருடன் வந்தவர்கள் லாரியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்தனர்.

    இதைப்பார்த்த நான் அவர்களை கண்டித்தேன். அப்போது ஆத்திரம் அடைந்த அவர்கள் பணத்தை திரும்பி தர மறுத்ததுடன் என்னை ஆபாசமாக திட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த நான் சுத்தியலால் பிரபுவை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். இதில் அவர் இறந்து விட்டார். என்று கூறினார்.

    அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள குட்டைக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் வேம்புசாமி (61). இவர் கடந்த 30 வருடங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணாரி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு திருவண்ணா –மலை சென்று கொண்டி ருந்தார். அவருடன் கிளீனர் குமார், கணக்காளர் செல்வ–ரத்தினம் ஆகியோரும் சென்றுள்ளனர்.

    இந்நிலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

    அவருடன் வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இது குறித்து வேம்புசாமியின் மனைவி கண்ணம்மாள் (57) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவை சூலூர் அருகே ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் குடும்பம் நடத்திய வாலிபர் பணப்பிரச்சினையால் சிக்கினார்.
    • வாலிபர் மீது நடவடிக்கை தேவையில்லை என 3 பெண்களும் கூறியதால் பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர், லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். அவருக்கு உறவுப்பெண்ணுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் லாரி டிரைவருக்கு பழக்கம் ஏற்பட்டது. வசதியான அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்றவர். குடும்பத்தினருடன் தகராறு செய்து விட்டு கோவை வந்தார். இங்கு பெட்ரோல் பங்க்கில் வேலைபார்த்தார்.

    லாரி டிரைவான வாலிபர் பெட்ரோல் பங்க்கிற்கு அடிக்கடி சென்று வந்ததில் அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் வாலிபர் தனிக்குடித்தனம் நடத்தினார். திருமணம் செய்யாமலேயே அவர்கள் கணவன்- மனைவி போல் 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணும், வாலிபரின் நண்பரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் மீது மோகம் கொண்ட வாலிபர், நண்பரை பற்றி தவறாக கூறி அவர்களை பிரித்தார்.

    பின்னர் அந்த பெண்ணுடன் இவர் பழகி காதலிக்கத் தொடங்கினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணையும் வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வெவ்வேறு இடங்களில் குடி வைத்து 3 பெண்களுடனும் வாலிபர் உல்லாசமாக வாழ்ந்து வந்தார்.

    சமீபத்தில் 3 பெண்களுக்கும் வாலிபரின் உண்மை நிலவரம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். 3 பேரும் வாலிபருக்கு நெருக்கடி கொடுத்தனர். எங்களை ஏமாற்றி விட்டாயே என கூறி கண்டித்தனர்.

    இந்தநிலையில் ஐதராபாத் பெண்ணிடம் இருந்து வாலிபர் ரூ.10 லட்சம் வாங்கி உள்ளார். அந்த பெண்ணின் குடும்ப சொத்தை விற்பனை செய்துள்ளனர். அதில் அந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பங்கு கிடைத்துள்ளது. அந்த பணத்தை வாங்கி வாலிபர் ஏமாற்றி விட்டார்.

    தற்போது பணத்தையும், வாழ்க்கையையும் இழந்த ஐதராபாத் பெண் நேற்று சூலூர் போலீஸ்நிலையம் வந்து புகார் செய்தார். தன்னை ஏமாற்றிய வாலிபரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என கூறி கண்ணீர் வடித்தார்.

    இதையடுத்து விசாரணைக்காக அந்த வாலிபரும், மற்ற 2 மனைவிகளும் அங்கு வந்தனர். அவர்களில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் மட்டும் தனக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தால் பிரச்சினை செய்யாமல் சென்று விடுகிறேன், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றார்.

    இதேபோல ஆழியார் பெண், வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் எனக்கு இப்போது தான் தெரியவந்தது. முதல் மனைவிக்கு குழந்தை இருப்பதால் அவர்கள் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது, எனவே நான் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறேன். அதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றார்.

    முதல் மனைவியோ ஒரு படி மேலே போய் எனது கணவர் நல்லவர் தான். இந்த பெண்கள் தான் அவரை வளைத்து போட்டு உள்ளனர். எனவே என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றார்.

    இதுதொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வாலிபர் மீது நடவடிக்கை தேவையில்லை என 3 பெண்களும் கூறுவதால் பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    இந்த சம்பவம் நேற்று சூலூர் போலீஸ்நிலையத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜா உறவினரின் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
    • அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா (34). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆர். என். புதூரில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விருந்துக்கு ராஜா வந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த உறவினரின் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை மிரட்டி உள்ளார்.

    இதற்கு பயந்து அந்த மாணவியும் இந்த விஷயத்தை வெளியே கூறவில்லை. இந்நிலையில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து மாணவி நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார்.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு 20 வருட சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பளி த்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார். இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    • தொழிற் சாலையின் முன் பகுதியில் டிப்பர் லாரியை சுத்தம் செய்வதற்காக லாரியின் பின்பகுதியை மேலே தூக்கி உள்ளார்.
    • இதில் கோபால் மீது மின்சாரம் பாயந்தது.

    சென்னிமலை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுதத வனவாசி புதுப்பேட்டை காலனியைச் சேர்ந்தவர் கோபால் ( 53 ). இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமுதா. கோபால் சென்னி மலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் தனியாக தங்கி உள்ளார்.

    ஒரு தனியார் நிறுவன த்தில் கோபால் டிப்பர் லாரி ஓட்டி வந்தார். இந்நிலையில் கோபால் ஈங்கூரில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு லோடு ஏற்ற டிப்பர் லாரியுடன் சென்றுள்ளார்.

    அப்போது அந்த தொழிற் சாலையின் முன் பகுதியில் டிப்பர் லாரியை சுத்தம் செய்வதற்காக லாரியின் பின்பகுதியை மேலே தூக்கி உள்ளார். அப்போது அங்கு மேல் பகுதியில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் டிப்பர் லாரியின் பகுதி உரசியது.

    இதில் கோபால் மீது மின்சாரம் பாயந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை செல்லும் வழியிலேயே கோபால் இறந்து விட்டார். இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-லாரி டிரைவர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • கீழக்கரை, புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    கீரைத்துறை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 37). இவர் சில நாட்களாக மன பதட்டத்துடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று காலை இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது 26), கூலித்தொழிலாளி.இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. 6 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவருக்கு இடுப்புவலி இருந்தது.

    பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்பாண்டியன் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (50). லாரி டிரைவர்.நேற்று மதியம் இவர் பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு லோடு ஏற்றி வந்தார். அங்குள்ள வெங்காய கடை அருகே லாரியை நிறுத்தினார்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வராஜ் லாரிக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதூர் தேசிய விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நாகசுப்பிரமணியன் மகன் பாண்டீஸ்வரன் (23).

    இவர் சில நாட்களாக யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தார். சம்பவத்தன்று இரவு இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    • சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
    • அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மங்கானூரைச் சேர்ந்தவர் சண்முகம் (54). லாரி டிரைவர். இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு சண்முகம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வந்துள்ளார்.

    நேற்று அவர் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றம் அருகே லாரி டிரைவரை பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • தங்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தென்பழஞ்சி. இப்பகுதியில் அரசு அனுமதியுடன் ஒரு குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து லாரியில் மண் எடுத்து செல்லப்படுகிறது.

    வழக்கம் போல் லாரியில் மணல் ஏற்றி சென்ற போது 3 பேர் கும்பல் லாரியை வழிமுறைத்து நிறுத்தி உள்ளனர்.

    பின்னர் சம்பந்தப்பட்ட கல்குவாரி நிறுவனம் தங்களுக்கு ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசில் லாரி டிரைவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பணம் கேட்டு மிரட்டிய தென்பழஞ்சியைச் சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மண்டல் தலைவர் இளையராஜா, ராஜாமணி, சோணமுத்து ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

    வடமதுரை, ஜூலை.6-

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள வெள்ள பொம்மன் பட்டியை சேர்ந்த கருப்பு ச்சாமி மகன் செல்வ குமார் (வயது 38) லாரி டிரை வராக வேலை பார்த்து வந்தார்.

    போ திய வரு மானம் இல்லாத தாலும் , உட ல்நலம் பாதிக்க ப்பட்டதாலும் மனமுடைந்த செல்வகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகி ன்றனர்.

    ×