லாரி டிரைவர் 'திடீர்' சாவு

சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
லாரி டிரைவர் 'திடீர்' சாவு
Published on

ஈரோடு:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மங்கானூரைச் சேர்ந்தவர் சண்முகம் (54). லாரி டிரைவர். இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு சண்முகம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வந்துள்ளார்.

நேற்று அவர் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com