என் மலர்
நீங்கள் தேடியது "Hanged himself"
- காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
அரக்கோணம் தாலுகா மூதூர் கிராமம் ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் உலகநாதன் (வயது 21).
இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இவர் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு தனது காதலியுடன் வந்தார். அங்கு பெரியமலை யோக நரச்சிம்மர் மலையில் உள்ள 600-வது படிக்கட்டு அருகில் உலக நாதனுக்கும்.
அவரது காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது காதலியின் துப் பட்டாவால் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொண்டபாளையம்போலீ சார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை. உலகநாதனுடன் வந்த அவரது காதலி என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேனில் புடவையைக் கொண்டு தூக்கில் தொங்கியபடி கிடந்தார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30). இவர் செய்யாறு சிப்காட் கம்பெனியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரேவதி (26) மற்றும் மகள்கள் மோனிஸ்ரீ (6), ரக்சயா(3) உள்ளனர்.
நேற்று காலை சிலம்பரசன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது குழந்தைகள் மட்டும் வெளியே தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளிடம் அம்மா எங்கே என கேட்டதற்கு, உள்ளே தூங்குவதாக தெரிவித்தனர்.
பின்னர் சிலம்பரசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பேனில் புடவையைக் கொண்டு ரேவதி தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விரக்தி
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ராணிப்பேட்டை சாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மகள் அதிசியா (வயது 17). ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது விடுமுறையில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் விடுமுறையில் இருந்த தனது மகளை அழைத்துக்கொண்டு சந்தோஷ் குமார் தனது மாமியார் வீடான ஜோலார்பேட்டை அருகே பால்னங்குப்பம் பகுதியில் உள்ள ராணி வீட்டிற்கு கடந்த 26-ந் தேதி வந்துள்ளார்.
அப்போது அதிசியா நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை தந்தை சந்தோஷ்குமார் கண்டிதனர். இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார். அதன் பின்னர் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு சென்று விட்டார். பாட்டி ராணி கடைக்கு சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த அதிசியா தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தந்தை சந்தோஷ் குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனர்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50), பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து பெருமாள் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பெருமாள் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- செய்யாறு உதவி கலெக்டர் விசாரணை
- இன்று பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் விபரீதம்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, பெரணமல் லூர் பூத்தான் குட்டை தெருவை சேர்ந்தவர் 'பிரவீன் குமார்(வயது 35). செய்யாறில் உள்ள தனி யார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி புவனேஸ் வரி(30). இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமானது முதல் புவனேஸ்வரிக்கும் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 1-ந் தேதி செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் விரிவு பசும்பொன் நகரில் வாடகை வீட்டில் கண வன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.
புவனேஸ்வரிக்கு இன்று (வியாழக்கிழமை) பிறந்த நாள் வருவதால், இதனை கொண்டாடு வது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கணவன் -மனைவி இருவரும் பேசியுள்ளனர்.
அப்போது, அவர் களுக்குள் பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் புவனேஸ்வரி வீட்டின் அறையில் தனியாக தூங்கச் சென்றார். பிரவீன்குமார் மற்றொரு அறையில் படுத்து தூங்கினார். மனைவியை எழுப்புவதற்காக பிரவீன் குமார் நேற்று காலை 6 மணி அளவில் அறைக்கு சென்றார்.
தூக்கிட்டு சாவு
அப்போது புவனேஸ் வரி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனால் பிரவீன் குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து செய் யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடலை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த புவ னேஸ்வரியின் தாயார் விஜயா அளித்த புகா ரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வ ரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் அனா மிகா விசாரணை நடத்தி வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு மருத்துவமனையில் பிதரத பரிசோதனை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அச்சுதன். அரசு ஊழியர். இவரது மனைவி சுலோச்சனா.
கிராம நிர்வாக உதவியாளர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் ஸ்ரீபிரியா (வயது 20). இவர் செய்யாறு அரசு கல்லூரியில் பி. ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மதியம் வீட்டின் அறையில் தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார். இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஸ்ரீபிரியாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீ பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடிக்க மனைவி பணம் தராததால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் தென்னவன் (வயது 62). இவரது மனைவி சுமதி. தென்னவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி சுமதியிடம் மது குடிக்க தென்னவன் பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மனைவி பணம் தராததால் மன உளைச்சலில் தென்னவன் காணப்பட்டார்.
பின்னர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி சுமதி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தென்னவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உதவி கலெக்டர் விசாரணை
- தம்பதிக்கு குழந்தை இல்லை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த அழிவிடை தாங்கி கிராமத்சேதை ர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவரது மனைவி சுகன்யா (23). இருவரும் மாங்காடு கூட்ரோட்டில் உள்ள சிப்காட் ஷூ கம்பெனி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு குழந்தை இல்லை.
கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து சுகன்யா தனது தாயார் வீடான வெங்களத்தூரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்கு போட்டுக் தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த னர். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுகன்யா உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் உதவி கலெக்டர் அனாமிகா விசாரணை நடத்தி வருகிறார்.
- கணவன் மது குடித்து தகராறால் விபரீதம்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது 32). இவர்களுக்கு அனுஷ்குமார்(12), கோகுல் (8) ஆகிய மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் செந்தில் வேலைக்கு சரிவர செல்வதில்லை.தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் அம்மு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் அங்கு சென்று அம்முவின் உடலை கைப்பற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அம்முவின் அக்கா லட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- மனைவி பிரிந்த துக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமண மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 26). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இதையடுத்து இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் நவின்குமாரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் அவர் மன உளைச்சலில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவின்குமாரின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உடல்நல குறைவால் விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்களம் பகுதியில் வசித்து வந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 56) இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கரும்பு ஆலை கொட்ட கையில் சவுந்தர்ராஜன் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுந்தராஜன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த பள்ளிகொண்டா போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் சம்மந்தமான நோய் இருந்து வந்ததாகவும் இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும் உடல் நிலை சரியாகாததால் அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் கூறினர்.