என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை,
நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 40) கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி கனகா என்கின்ற மனைவியும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கொத்தூர் அருகே சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியமரத்தில் பழனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் கனகா புகார் அளித்தார்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பழனி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






