என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
- திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் பரிதாபம்
- உதவி கலெக்டர் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே சாத்தம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த சுரேந்திரன். இவரது மனைவி சினேகா வயது (19) இவர்கள் இருவரும் ஆம்பூரில் ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 நாட்களாகிறது. நேற்று இரவு மர்மமான முறையில் சினேகா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து உமராபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே ஆனதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story






