லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.நாகராஜ் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு அடுத்த கே.ஆர்.பாளையம் கே.கே.நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (35). லாரி டிரைவர். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

நாகராஜிக்கு மதுப்பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் சம்பவத்தன்று இரவு நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதைப்பார்த்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.

இதையடுத்து விஜயலட்சுமியும், அவரது மகள்களும் லீலாவதி என்பவர் வீட்டில் இரவு தூங்க சென்றனர். மறுநாள் மகள் வீட்டிற்கு வந்தபோது நாகராஜ் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து விஜயலட்சுமி சித்தோடு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com