search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liquor bottles"

    • மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையிட்டனர்.
    • சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை போலீசார் வழி மறித்தனர்.

    தஞ்சாவூா்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு பொலிரோ வேனை போலீசார் வழி மறித்தனர்.

    இதனைப்பார்த்த அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

    அதில் 2400 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து வாகனத்தில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நிரவி குமரன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி (வயது 22), காரைக்கால் இலத்தியூர் முதலியார் தெருவை சேர்ந்த ஜெயபால் (40), மேல பொன்னேரி மேட்டுத் தெருவை சேர்ந்த ராஜப்பா (32) ஆகிய 3 பேர் என்பதும், காரைக்கால் நிரவி பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த போலி மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகணபதி, ஜெயபால், ராஜப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 2400 மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரைக்கால் பகுதி போலீசாரிடம் தகவல் தெரிவித்து அங்கு உள்ள போலி மதுபான ஆலையம் மூட வைத்தனர்.

    தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
    • மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மருங்குளம் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் தஞ்சை அடுத்த ராவுசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 26) என்பதும், மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கீழக்கரையில் கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை நடக்கிறது.
    • ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் அரசு மதுபான கடைகள் இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கீழக்கரையில் மது விற்பனை களைகட்டி நடந்து வருகிறது.

    கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை போல் அமைத்து கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பனை நடக்கிறது.

    மேலும் பெண்கள் நடந்து செல்லும் பல்வேறு பாதைகளில் மது பிரியர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர். இதனால் கீழக்கரையில் ரோந்து பணியில் போலீசார் உள்ளனரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் உறக்கத்தில் உள்ளனர். மேலும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து தலைமை இடத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தும் கோர்ட், வழக்கு, விசாரணைக்கு பயந்து எவ்வித புகாரும் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்.

    இதுசட்ட விரோத மான மதுபான விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் தேவிப்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அங்குள்ள சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது.

    நெல்லை:

    சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் தேவிப்பட்டினம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது. அவரை விசாரித்தபோது, ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் இந்திரா காலனியை சேர்ந்த தவம்(வயது 46) என்பதும், மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • களக்காடு அருகே உள்ள வி.கே.நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது
    • நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 64 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள வி.கே.நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் பணி புரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவில் பணி முடிந்ததும் 3 பேரும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 64 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரத்து 600 ஆகும்.

    இதுபற்றி கடையின் மேற்பார்வையாளர் சுத்தமல்லியை சேர்ந்த முரளி (வயது 52) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • காளியப்பன் வீட்டில் 40 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அருண்குமாரை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராயகிரி காந்தி தெருவை சேர்ந்த காளியப்பன் (வயது 40) என்பவரது வீட்டில் சோதனை செய்ததில் அங்கு 40 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து ராயகிரி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த அருண்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 95 மதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.
    • முனீஸ்வரன் ,ஜெயசூர்யா ஆகியோர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான விஸ்வநாதப்பேரி, வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    மதுபாட்டில்கள் பறிமுதல்

    அப்போது தேவிப்பட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 38) என்பவரும், வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவை சேர்ந்த ஜெயசூர்யா (22) என்பவரும் தெற்கு சத்திரம் பிள்ளையார் கோவில் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் 2 பேரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பங்களாப்புதூர் போலீசார் அண்ணாதுரையிடம் இருந்து 24 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் மதுபானம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் கள்ளிப்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (37) என்பவர், சாக்கு பையில் மது பாட்டில்களை கொண்டு வந்து,தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை அருகே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    பங்களாப்புதூர் போலீசார் அண்ணாதுரையிடம் இருந்து 24 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ராஜேந்திரனிடமிருந்து 61 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தர்மபுரியை சேர்ந்த சின்னச்சாமியை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

    சிவகிரி, ஆக.15-

    சிவகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் சிவகிரி, ராயகிரி, விஸ்வநாதப்பேரி போன்ற முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே தெற்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது - 67) என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்ற இவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது இவரிடமிருந்து 61 மதுபாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

    இதைப்போன்று சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் தர்மபுரியை சேர்ந்த சின்னச்சாமி (வயது - 50) என்பவர் அவரது வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசார் இவரை பிடித்து சோதனை செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சிவகிரி பிராட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சிவகாமி (வயது 60). இவர் மதுபாட்டில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாரை கண்டவுடன் தப்பித்து செல்ல முயன்றார். இவரை பிடித்து சோதனை செய்ததில் 9 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த 9 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் சிவகிரி பகுதியில் 82 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேர் மீதும் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் நவமணி விசாரணை நடத்தி வருகிறார்.

    • சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 390 மது பாட்டில்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 390 மது பாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை பல இடங்களில் நடப்பதாக புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதாபண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.அதன் பேரில் தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக ஆலங்குடி பகுதி யில் ரோந்து பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    அதன்படி இன்று ஆலங்குடி அண்ணாநகர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை நிறுத்த முயன்றனர்.ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது. வாகத்தை பிடிப்பதற்காக போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த ஓட்டுநர், வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில், 390 மது பாட்டில் இருப்பது தெரியவந்தது. பின்னர் வாகனத்துடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

    • அந்தியூர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் புதுக்காடு செல்லும் சாலையில் ஒரு கடையும், தவுட்டுப்பாளையம் அத்தாணி செல்லும் சாலையில் 2 கடைகளும், பள்ளியபாளையத்தில் ஒரு கடை, மூலக்கடை பகுதியில் ஒரு கடையும் என 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ.15 வரை அதிக விலைக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகம் வாங்குவதால் இதைப்பற்றி யாரிடம் கூறுவது என்று தெரியாமல் வேதனையோடு மது போதையில் அவர்களின் நண்பர்கள் இடத்தில் கூறி ஆறுதல் அடைந்து வருகின்றார்கள்.

    அந்தியூர் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு அரசு நிர்ணயித்த விலையிலேயே மது பாட்டில்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சின்னசேலம் பகுதியை சேர்ந்த நித்தீஸ்குமார் (22) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்தீஸ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×