என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது
- போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
- மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த மருங்குளம் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தஞ்சை அடுத்த ராவுசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 26) என்பதும், மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






