search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைத்திருந்த"

    • ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
    • 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 2022-2023-ம் ஆண்டு க்கான சொத்து வரி, காலி இட வரி, குடிநீர் வரி, வணிக கடைகளுக்கான வாடகை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்தும், மாநகராட்சி வணிக கடைகளுக்கான வாடகை பாக்கி வைத்திருந்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு சொந்த மான நேதாஜி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகள் வாடகை யாக ரூ.97 ஆயிரத்து 965 ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர்.

    மாநகராட்சி அதிகாரிகள் அந்த மூன்று கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணம் செலுத்தாததால் 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    • கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.

    ஈரோடு, ஆக. 9-

    ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா உத்தர வின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செந்தில் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் போலீசார் கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணா வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

    அப்போது வீட்டினுள் ஒரு பெண் இருந்தார். அவர் அருகே ஒரு பெரிய பை இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 100-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 3.50 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வி (48) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் அந்த பெண் மற்றும் கஞ்சா பொட்டலங்களை எடுத்துக் கொண்டு சூரம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாண்டிதுரை (28) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சின்னசேலம் பகுதியை சேர்ந்த நித்தீஸ்குமார் (22) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நித்தீஸ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி–பாளையம் அருகே உள்ள கடத்தூர், காசிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி களில் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது காசிபாளை யம் பஸ் நிறுத்தம் பகுதியில் 2 பேர் பையுடன் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீ சார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிங்கிரி பாளையத்தை சேர்ந்த திலீப்குமார் (19), மாக்கணாங் கோம்பை பகுதியை சேர்ந்த விஜய் (21) எனவும், கஞ்சா விற்பனை கொண்டு சென்ற தும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் கஞசாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×