search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது பிரியர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது.

    அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர்.

    வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு தினமும் மதுபானங்களை வழங்கி உற்சாகப்படுத்தினர். எப்போதும் கோடை காலங்களில் மட்டுமே பீர் விற்பனை அதிகரித்து காணப்படும். ஆனால் தெலுங்கானாவில் வித்தியாசமாக குளிர்காலமான நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாட்களில் 22 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகி உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 12 லட்சம் பெட்டி விற்பனையாகி இருந்தது. பீர் வகைகளுடன் ஒப்பிடும்போது ஹாட் வகை மதுபான விற்பனை மந்தமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    நவம்பர் 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் ரூ.1,470 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    வருகின்ற 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நாளை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    அதனால் இன்று காலை முதலே மது பிரியர்கள் ஏராளமானோர் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுக்கடைகள் முன்பாக திருவிழா கூட்டம் போல் மது பிரியர்கள் குவிந்தனர்.

    தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர்.

    • நடுரோட்டையே பாராக மாற்றி 2 வாலிபர்கள் மது குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • மது பிரியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் சாலையில் அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கிருந்து தள்ளாடியபடி சென்றனர்.

    விருதுநகர்:

    மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து அன்றாடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் நாள்தோறும் மதுகுடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல் வீதிக்குவீதி டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.

    இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மதுபோதையில் வாழ்க்கையை தொலைத்து உடல் நலத்தையும் காக்க முடியாமல் பலர் ஆஸ்பத்திரிகளிலும், நலவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெறுவதை காணலாம். மது பழக்கத்தை கைவிட வேண்டும் என அறிவுறுத்தினாலும் 'குடி' மகன்கள் அதனை கண்டு கொள்வதில்லை.

    இந்தநிலையில் நடுரோட்டையே பாராக மாற்றி 2 வாலிபர்கள் மது குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று இரவு 2 பேர் மது வாங்கினர். அவர்கள் பாரில் அமர்ந்து மது குடிக்காமல் திடீரென கடை எதிரே உள்ள சாலையில் நடுவே அமர்ந்து மது குடித்தனர். வாகன, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் ஊர் கதையை பேசி குடிமகன்கள் 2 பேர் மது குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை ஆச்சரியத்துடன் சிறிது நேரம் பார்த்து விட்டு சென்றனர். சிலர் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தும் மது பிரியர்கள் அதை கண்டு கொள்ளாமல் மது குடிப்பதில் ஆர்வமாக இருந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை. வாகன சோதனை, சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு வேகமாக வந்து கவனிக்கும் போலீசார் இதற்கு எந்தவித தீவிரமும் காட்டவில்லை. மது பிரியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் சாலையில் அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கிருந்து தள்ளாடியபடி சென்றனர்.

    இந்த சம்பவம் விருதுநகர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் மது குடித்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் சாலைகள் அனைத்தும் மது கூடங்களாக மாறிவிடும் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    தென் பெண்ணை ஆற்றில் இரவோடு இரவாக மது பிரியர்களுக்காக சாலை அமைத்ததை தடுத்த போலீசார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் அருகே புதுச்சேரி மாநிலம் உள்ளதால் அங்குள்ள மது பாட்டில்கள் விலை குறைவாகவும் மற்றும் சாராயம் விற்பனை செய்வதால் தமிழகப் பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான மது பிரியர்கள் புதுவை மாநில பகுதிக்கு சென்று மது அருந்தி வருகின்றனர்  இதன் காரணமாக கடலூர் அருகே உள்ள புதுவை மாநில எல்லையில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்கள் கடந்த சில வருடங்களாக மது பிரியர்களுக்காக இலவசமாக ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்தினர் தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது இலவச படகு சவாரி, சிறிய மரப்பாலம், தண்ணீர் செல்லாத போது மண் சாலை அமைத்து மதுபிரியர்கள் எளிதாக சாராயக்கடைக்கு சென்று மது குடிப்பதற்கு ஏதுவாக அமைத்தனர்.

    இதன் காரணமாக கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை குறையும் நிலை ஏற்பட்டது. மேலும் மது பிரியர்கள் புதுவை மாநிலத்திற்கு சென்று மது குடிக்காமல் தடுப்பதற்கு போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து கடும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.தென்பெண்ணை ஆற்றில் பாதி பகுதி புதுவை மாநிலத்திற்கும், பாதி பகுதி தமிழக பகுதிக்கும் சொந்தமானது என்பதால் சாராயக்கடை உரிமையாளர்கள் புதுவை மாநில பகுதிகளில் மண்சாலை, சிறிய பாலம் போன்றவற்றை உருவாக்கி தயார் நிலையில் வைத்துள்ளனர்மேலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ,வருவாய்த்துறை அதிகாரிகள் கண்ணி இமைக்கும் நேரத்தில் தங்களுக்கு தேவையான சாலை வசதிகளை மேம்படுத்தி மது பிரியர்கள் வந்து செல்வதற்கு சாலை வசதிகளை தயார்படுத்தி விடுகின்றனர்  இந்த நிலையில் நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம் பட்டு பகுதியில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நடந்து சென்று புதுவை மாநிலம் மணல்மேடு பகுதியில் உள்ள சாராயக் கடைக்கு எளிதாக செல்லும் வகையில் மண் சாலை அமைக்கும் பணி ஜே.சி.பி. வாகனம் மூலம் விறுவிறுப்பாக நடந்தது 

    இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இது சம்பந்தமாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள்சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தமிழகப் பகுதிகளில் தற்காலிகமாக அமைக்க ப்பட்ட மண்சாலையை ஜேசிபி வாகனம் மூலம் அகற்றினார்கள்  மேலும்யாரும் செல்லாமல்இருக்க அதிரடியாக பள்ளம் தோண்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ் வழியாக மது பிரியர்கள் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி இதற்கான ஏற்பாடுகள் செய்தது யார்? இதில் சாராயக்கடை உரிமையாளர்கள் தலையீடு உள்ளதா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்  மேலும் தமிழகப் பகுதிகளில் ஆற்றில் அத்துமீறி மண் சாலை அமைத்தது தொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    • அந்தியூர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் புதுக்காடு செல்லும் சாலையில் ஒரு கடையும், தவுட்டுப்பாளையம் அத்தாணி செல்லும் சாலையில் 2 கடைகளும், பள்ளியபாளையத்தில் ஒரு கடை, மூலக்கடை பகுதியில் ஒரு கடையும் என 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ.15 வரை அதிக விலைக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகம் வாங்குவதால் இதைப்பற்றி யாரிடம் கூறுவது என்று தெரியாமல் வேதனையோடு மது போதையில் அவர்களின் நண்பர்கள் இடத்தில் கூறி ஆறுதல் அடைந்து வருகின்றார்கள்.

    அந்தியூர் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு அரசு நிர்ணயித்த விலையிலேயே மது பாட்டில்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சின்னசேலம் பகுதியில் 144 தடையின் காரணமாக மது பிரியர்கள் சேலம் மாவட்டத்துக்கு படையெடுக்கின்றனர்.
    • கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம் தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி அன்று பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பஸ் என அனைத்து வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி அறைகளை நொறுக்கி சேதப்படுத்தினார்கள். எஸ் பி, டி எஸ் பி, மற்றும் பெண் காவலர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட காவலர்களும் தாக்கப்பட்டார்கள்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம் தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டது. மதுபான கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் அவதிப்பட்டு வந்தார்கள். பின்பு அருகில் உள்ள சேலம் மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு படையெடுத்துச் சென்று மது அருந்து வருகிறார்கள் மது பிரியர்கள்.

    ×