என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பகுதியில் 144 தடை:  மது பிரியர்கள் சேலம்  மாவட்டத்துக்கு படையெடுப்பு
    X

    144 தடை உத்தரவு பிறப்பித்தால்  மதுபான கடைகள் மூடப்பட்டது இருப்பதை படத்தில் காணலாம்.

    சின்னசேலம் பகுதியில் 144 தடை: மது பிரியர்கள் சேலம் மாவட்டத்துக்கு படையெடுப்பு

    • சின்னசேலம் பகுதியில் 144 தடையின் காரணமாக மது பிரியர்கள் சேலம் மாவட்டத்துக்கு படையெடுக்கின்றனர்.
    • கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம் தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி அன்று பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து மாணவியின் பெற்றோர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பஸ் என அனைத்து வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி அறைகளை நொறுக்கி சேதப்படுத்தினார்கள். எஸ் பி, டி எஸ் பி, மற்றும் பெண் காவலர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட காவலர்களும் தாக்கப்பட்டார்கள்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம் தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டது. மதுபான கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் அவதிப்பட்டு வந்தார்கள். பின்பு அருகில் உள்ள சேலம் மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு படையெடுத்துச் சென்று மது அருந்து வருகிறார்கள் மது பிரியர்கள்.

    Next Story
    ×