search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு
    X

    மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு

    • அந்தியூர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் புதுக்காடு செல்லும் சாலையில் ஒரு கடையும், தவுட்டுப்பாளையம் அத்தாணி செல்லும் சாலையில் 2 கடைகளும், பள்ளியபாளையத்தில் ஒரு கடை, மூலக்கடை பகுதியில் ஒரு கடையும் என 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ.15 வரை அதிக விலைக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகம் வாங்குவதால் இதைப்பற்றி யாரிடம் கூறுவது என்று தெரியாமல் வேதனையோடு மது போதையில் அவர்களின் நண்பர்கள் இடத்தில் கூறி ஆறுதல் அடைந்து வருகின்றார்கள்.

    அந்தியூர் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு அரசு நிர்ணயித்த விலையிலேயே மது பாட்டில்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×