search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான பாட்டில்கள்"

    • மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையத்தில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டனர்.

    அந்த காரில் வந்த சூலூர் வதம்பச்சேரி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் ராஜேந்திரன் (வயது 37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அனுமதி இன்றி மதுபான பாட்டில்கள் கடத்தியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 80 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
    • கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.மதுபான கடைகள் அதிகரிப்பால், மதுபானம் குடிப்பவர்கள் எண்ணிக்கையும் மளமளவென அதிகரித்து வருகிறது. போதை ஒரு தீய பழக்கம் என்பது போய் தற்பொழுது இளைஞர்களிடையே அது "பேஷன்" ஆகி வருகிறது. இந்த நிலையில், சிலர் மதுபானங்களை வாங்கி வந்து வாய்க்கால் மற்றும் விவசாய நிலங்கள் அருகே குடித்துவிட்டு, அங்கேயே வீசி சென்று விடுகின்றனர். இதனால் விவசாயிகள் உழவுப் பணி மேற்கொள்ளும் போது உடைந்த கண்ணாடி பாட்டிலின் சிதறல்கள் கால்களில் குத்தி கிழிக்கிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் மேய்ச்சல் நிலங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்ணுவதால் அவற்றின் வயிற்றில் சிக்கி கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து திறந்தவெளிகள், விவசாய நிலங்கள் போன்றவற்றில் மது அருந்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது
    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்ட மது விலக்கு போலீசார் வடலூர் பகுதியில் கடந்த வாரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போலி மதுபாட்டில்கள் விற்பனையில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் போலி மதுபான பாட்டில்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில் தங்கி விசாரணை நடத்தினர். இதில் கல்வராயன்மலை அருகே நடுத்தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கியதை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று, போலி மதுபான தொழிற்சாலை கட்டிடத்தை சுற்றிவளைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது. மதுபானம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், பல்வேறு நிறுவனங்களின் பெயரில் அச்சிடப்பட்டிருந்த லேபில்கள். காலி பாட்டில்கள், பாட்டில் மூடி, காலி அட்டை பெட்டிகள், சில எந்திரங்கள் இருந்ததை கண்டனர். மேலும், 454 மதுபாட்டில்கள் அட்டைப் பெட்டியில் வைத்து வெளியில் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததையும் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.

    இவை அனைத்தையும் பறிமுதல் செய்த கடலூர் மாவட்ட போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிடம் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் ஓப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வீரன், அதே மாவட்டத்தை சேர்ந்த பொறையார் பகுதி ரியாஸ் அகமது, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதி தொரடிப்பட்டை சேர்ந்த வெங்கடேசன், கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வயலாமூர் குபேந்திரன் என்பது தெரியவந்தது.

    இவர்கள் தயாரித்த போலி மதுபானங்களை தமிழகத்தில் உள்ள எந்தெந்த பகுதிகளுக்கு, எப்படி, யார் மூலமாக அனுப்பி வைத்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் யார்? யார்? என்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதும், இது தொடர்பாக போலீசார் வாரம் ஒரு முறை 2 ஆயிரத்திலிருந்து, 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்களை கண்டறிவது வழக்கம். அதே சமயத்தில் இந்த ஊரல்களை வைத்திருந்தவர்களோ, அதனை காய்ச்சியவர்களோ இதுவரை பெரியளவில் கைது செய்யப்படவில்லை.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை தொரடிப்பட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்ததை கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் கண்டறிந்து, கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    அதாவது, இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசாருக்கோ, கரியாலூர் போலீசாருக்கு தெரியாதா?, தெரியவில்லை என்றால் ஏன் தெரியவில்லை, தெரிந்திருந்தால் இவ்வளவு நாட்களாக ஏன் பிடிக்கவில்லை? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் கல்வராயன் பகுதி மக்கள் போலீசார் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    பங்களாப்புதூர் போலீசார் அண்ணாதுரையிடம் இருந்து 24 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் மதுபானம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் கள்ளிப்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (37) என்பவர், சாக்கு பையில் மது பாட்டில்களை கொண்டு வந்து,தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை அருகே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    பங்களாப்புதூர் போலீசார் அண்ணாதுரையிடம் இருந்து 24 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×