search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanimozhi mp"

    • எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது.
    • இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் அடங்குவர்.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் தற்போதைய கள நிலவரம் குறித்து ஆராய 2 நாள் பயணமாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை, எம்.பி.க்கள் குழு சந்தித்தது.

    இதற்கிடையே, இந்தக் குழுவினர் இன்று டெல்லி திரும்பினர். டெல்லி திரும்பிய பிறகு தி.மு.க. கனிமொழி எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் எம்.பி.க்கள் மட்டும் சந்தித்துப் பேசினோம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை. தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காப்பாற்ற வேண்டிய காவல்துறையே உதவவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் கூறினர்.

    மணிப்பூரில் உள்ள முகாம்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் மாநில அரசு மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.

    மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை, மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய். மணிப்பூரில் நிரந்தர அமைதி உருவாவதற்கான சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • நயினார்பத்து ஊராட்சியில் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம், ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
    • நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே ராமநாதபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு, வாகைவிளையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகள், நயினார்பத்து ஊராட்சியில் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம், ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    இத்திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செய லர் உமரிசங்கர், திருச் செந்தூர் ஆர்.டி.ஓ. குரு சந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி ஊரா ட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆதி லிங்கம், அமுதவல்லி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் தங்கலட்சுமி, செந்தில், உடன்குடி பேரூ ராட்சி முன்னாள் உறுப்பி னர்கள் சலீம், அன்வர் சலீம் உட்பட திரளான ஊர் மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழக அரசு கிராமப்புற பெண்களின் பொருளாதார

    முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகள் நன்கு இருந்தால் தான் முன்னேற்றம் ஏற்படும். கிராமப்புற பெண்களின் முன்னேற்றமே அந்த நாட்டை உயர்த்தும்.

    அதற்கேற்ப பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக பஸ் வசதி செய்து தரப்படும். பெண் களின் உரிமைத் தொகை தகுதி வாய்ந்த அனை வருக்கும் வருகிற செப் டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சுமார் ஆயிர த்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள், இல வச வீட்டு மனை பட்டாக்கள், தையல் எந்தி ரங்கள் ஆகியவற்றை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    • வேப்பங்காடு ஊர் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை எனவும், பஸ் வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர்.
    • அதன்படி இன்று காலை புதிய பஸ் வேப்பங்காடு ஊருக்கு வந்தது. பொதுமக்கள், சிறுவர்கள் உற்சாகமாக பஸ் பயணம் செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்காட்டில் மக்கள் களம் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது. இதில் கனிமொழி எம்பி., மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    நிகழ்ச்சியில் வேப்பங்காடு ஊர் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை எனவும் பஸ் வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர். ஒரு வாரத்தில் பஸ் வசதி செய்யப்படும் என மக்கள் களம் நிகழ்சியில் உறுதிமொழி கொடுக்க ப்பட்டது.

    அதன்படி இன்று காலை புதிய பஸ் வேப்பங்காடு ஊருக்கு வந்தது. பொதுமக்கள், சிறுவர்கள் உற்சாகமாக பஸ் பயணம் செய்தனர். இந்த பஸ் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வேப்பங்காடு வழியாக சாத்தான்குளத்திற்கு இயக்கப்படுகிறது. இன்று நடந்த பஸ் சேவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், உடன்குடி யூனியன் சேர்மனுமான பாலசிங் தலைமை தாங்கினார்.

    பாராட்டு

    லெட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் ஆதிலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் தங்கலெட்சுமி, உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் விஜயா, கிளை செய லாளர்கள் கோபால கிருஷ்ணன், ராஜ்குமார், மோகன், தி.மு.க. நிர்வாகிகள் ஐசக், ஜாம்டக்கர், முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் சேவை வழங்கிய கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • கனிமொழி எம்.பி. புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதை உடனடியாக புதுப்பித்து கட்ட வேண்டும் என்று கடந்த மாதம் மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குலசேகரன்பட்டினத்தில் தனியார் சமூகப் பொறுப்பு நிதியாக ரூ.1.12 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், ஆர்.டி.ஓ. வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க செயலர் க.இளங்கோ, குலசேகரன்பட்டினம் ஊராட்சி தலைவி சொர்ணப்பிரியா, துணைத்தலைவர் கணேசன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அஜய், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, கிழக்கு ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதன்மனோஜ், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் 5 இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது.
    • 24 நேரம் குடிநீர் வழங்கப்படும் திட்டமானது பெருமை தரக்கூடிய ஒன்று.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சி மேல ரதவீதியில் ரூ. 8.41 கோடி மதிப்பிட்டில் அம்ருத் குடிநீர் திட்ட பணிகளின் கீழ் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி.

    தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். மீன்வளம் மற்றும் மீனவ ர்நலன்- கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    அம்ரூத் குடிநீர் திட்டத்தில் அமைக்கப்படும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 4 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டது. இதன் மூலம் 5 இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படவுள்ளது. 24 மணி நேரமும் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கான திட்டம்தான் இத்திட்டம். இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    24 மணி நேரமும் குடிநீர்

    தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தென்திருப்பேரையில் 24 நேரம் குடிநீர் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்படுவது பெருமை தரக்கூடிய ஒன்று. மேலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடிக்கல் நாட்டு விழாவில் தொழில் அதிபர் கண்ணன் பண்ணையார், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட தலைவர் பார்த்தீபன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மத்திய ஒன்றிய அவை தலைவர் மகரபூஷணம், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மாலா, ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, திருச்செந்தூர் தாசில்தார் வாமணன், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், தென்திருப்பேரை நகர செயலாளர் முத்துவீர பெருமாள், ஆழ்வை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், தென்திருப்பேரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் பாபு, துணை தலைவர் அமிர்தவள்ளி, கவுன்சிலர் ஆனந்த் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜமன்னியபுரம் கடையின் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
    • தூய்மை ஆக்கப்பட்டுள்ள இடத்தை கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 2 புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டன.

    ரேஷன்கடைகள் திறப்பு

    தலா ரூ. 13.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ராஜமன்னியபுரம் கடையின் கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். மடத்துவிளை கடையின் கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் வரவேற்று பேசினார்.

    கனிமொழி எம்.பி. ஆய்வு

    பின்னர் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே முன்பு குப்பை கிடங்காக இருந்து தற்போது தூய்மை ஆக்கப்பட்டுள்ள இடத்தை கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டனர். அந்த இடத்திற்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

    நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமணன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆழ்வை ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன், வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ், தயாவதி, சிவக்குமார், ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் வழங்கி வருவது போல் மகளிர் உரிமைத்தொகையும் விரைவில் வழங்கப்பட உள்ளது என கனிமொழி எம்.பி. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 77 பேர் மற்றும் 3-ம் பாலினத்தவர் 13 பேர் என 90 பயனாளிகளுக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு பெண்கள், மாற்றுத்திறனா ளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பஸ்சில் இலவச பயணம், கொரோனா காலத்தில் உதவித்தொகை, மக்களை தேடி மருத்துவம், மாற்றுத்தி றனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் வழங்கி வருவது போல் மகளிர் உரிமைத் தொகையும் விரைவில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சிவசங்கர், வருவாய் கோட்டாட்சியர் ஜெயா, விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார்கள் பாலமுருகன், சுபா, சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சி யர் பாஸ்கரன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஊராட்சி மன்ற தலைவர் போஸ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், தி.மு.க. நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை காலை 9.30 மணிக்கு தென்திருப்பேரை பேரூராட்சியில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல் நடக்கிறது.
    • தொடர்ந்து எல்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் மின்மாற்றி இயக்குதல் மற்றும் 13 பேட்டரி கார்கள் ஆகியவற்றை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாளை (வியாழக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

    அடிக்கல் நாட்டுவிழா

    அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு தென்திருப்பேரை பேரூராட்சியில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல், ஆறுமுகநேரி பேருராட்சியில் மடத்துவிளை மற்றும் ராஜமன்னார்புரத்தில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு, காலை 10.30-க்கு ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு எதிர்புறம் உள்ள குப்பை கிடங்கை பார்வையிடுதல், காலை 10.45-க்கு காயல்பட்டினம் நகராட்சி அரசு மருத்துவமனையில் ரூ.62 கோடி மதிப்பு விரிவாக்க பணிகள் மற்றும் புதியசாலை பணிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    தொடர்ந்து எல்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் மின்மாற்றி இயக்குதல், புதிய பஸ் நிலையம் அருகில் 2350 எல்.இ.டி.விளக்கு அமைக்கும் பணி மற்றும் 13 பேட்டரி கார்கள் ஆகியவற்றை தொடங்கி வைக்கின்றனர். மாலை 4.30 மணிக்கு உடன்குடி ஒன்றியம் லட்சுமிபுரம் ஊராட்சி வேப்பங்காட்டில் மக்கள் களம் நிகழ்ச்சி மற்றும் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டுதல், மாலை 5.30-க்கு நயினார்பத்து, மாலை 6.30-க்கு சீர்காட்சி ஆகிய ஊர்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • எத்திலப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • பணிகளை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எத்திலப்ப நாயக்கன்பட்டி, தலை காட்டுப்புரம், நீராவி புதுப்பட்டி, ராமனூத்து உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் களம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் எத்திலப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நீராவி புதுப்பட்டி-பருவக்குடியில் ரூ.198 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, ராம னூத்து-பருவக்குடியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பணியை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக ்கொண்டார்.

    நிகழ்ச்சியில் விளாத்தி குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்தி ஒன்றிய செய லாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், எட்டயபுரம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் சுந்தர், ராமனூத்து ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், இம்மானுவேல், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உட்பட கலந்து கொண்டனர்.

    • பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து 2 பவுன் தங்க செயினை பரிசாக பெற்றது.

    எட்டயபுரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் எட்டயபுரம் நகர தி.மு.க சார்பில் இன்று காலை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடந்தது.

    போட்டியில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    போட்டியை விளாத்தி குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து 2 பவுன் தங்க செயினை பரிசாக பெற்றது.

    சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி 2-வது இடம் பிடித்து 1½ பவுன் தங்க செயினை பெற்றது. 3-வது இடம் பிடித்த நெல்லை மாவட்டம் வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க செயினும், 4-வது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார் மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியில் 22 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிக்கு 4½ கி.மீ. தூரம் நிர்ணயிக்கப் பட்டது. போட்டிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகி யோர் கொடித்து தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் முதலிடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க செயினும், 2-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ¾ பவுன் தங்க செயினும், 3-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ½ பவுன் தங்க செயினும் 4-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

    இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டய புரம் பேரூர் செயலாளர் பாரதி கணேசன், கோவில் பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், எட்டயா புரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் மணி கண்டன், மைக்கேல் ராஜ், தி.மு.க. வார்டு செயலாளர் சின்னப்பர், ராம்குமார் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு அடைக்கலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • தொடர்ந்து 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் என ரூ.20 லட்சத்து 23 ஆயிரத்து 88 அளவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    திருச்செந்தூர்:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட சோலை குடியிருப்பு, வள்ளி யம்மாள்புரம், அடைக்கலா புரம் ஆகிய பகுதிகளில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சாலை பணிகள் தொடங்கி வைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு அடைக்க லாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பயனாளி களுக்கு வருவாய் துறை சார்பில் 14 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 பேருக்கு கடன் உதவி தொகையும், மாற்றுத்திற னாளி நலத்துறை சார்பில் 2 பேருக்கு மூன்று சக்கர நாற்காலியும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் 6 பேருக்கும், 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் என ரூ.20 லட்சத்து 23 ஆயிரத்து 88 அளவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் தங்கள் அடைக்கலாபுரம் ஊருக்கு பஸ் வசதி இல்லை. எங்களுக்கு பஸ் வசதி வேண்டும் என்று கேட்டார். உடனே கனிமொழி எம்.பி. நடவடிக்கை எடுப்பதாக கூறி மாலையிலே பஸ் விட ஏற்பாடு செய்து பஸ் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இம்முகாமில் சப்- கலெக்டர் குருசந்திரன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், யூனியன் சேர்மன் பாலசிங், ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, செம்ம றிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம், வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப் பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • தூத்துக்குடியில் இருந்து மிகச்சிறந்த வீரர்களை, வீராங்கனைகளை இந்த நாட்டிற்கும், உலகிற்கும் உருவாக்கி காட்டுவோம் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப் பைக்கான விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிச ளிப்பு விழா நடைபெற்றது.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

    விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி னார். மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண் டேயன், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கனிமொழி எம்.பி., பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு, விளை யாட்டில் ஆர்வம் இருக்கக்கூடியவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சுந்தர வேல்புரம், அசோக்நகர், பழைய மாநகராட்சி அருகில், புல் தோட்டம் ஆகிய 4 பகுதிகளில் உள் விளையாட்டு அரங்குகள் ஷட்டில் காக் விளை யாட்டி ற்காக விரைவில் திறக்கப்படும்.

    தூத்துக்குடியில் இருந்து மிகச்சிறந்த வீரர்களை, வீராங்கனைகளை இந்த நாட்டிற்கும், உலகிற்கும் உருவாக்கி காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்

    பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாடு எல்லா வகையிலும் உயர வேண்டும் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். நமது மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, பயிற்சி கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், டி.ஆர்.ஓ. அஜய் சீனிவாசன், சப்-கலெக்டர் கவுரவ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோ ரன்ஸ், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பா ளர் ஆனந்த கபரியேல்ராஜ், மருத்துவ அணி அமை ப்பாளர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது, மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர்கள் ரிக்டா, பொன்னப்பன், சந்திரபோஸ், கண்ணன், விஜயகுமார், ராஜதுரை, கந்தசாமி, வட்டச் செயலா ளர்கள் சுப்பையா, டென்சிங், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மகளிர் அணி ரேவதி, சத்யா, மற்றும் மகேஸ்வ ரசிங், வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், பிரபாகர், பாஸ்கர், தாசில்தார் பிரபாகர், முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடைபந்து பயிற்சியாளர் ஆனந்த் நன்றி கூறினார்.

    ×