search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மெஞ்ஞானபுரம் அருகே நலத்திட்ட முகாமில் பெண்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக  பஸ் வசதி செய்து கொடுத்த கனிமொழி எம்.பி. - பொதுமக்கள் பாராட்டு
    X

    மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளனர்.

    மெஞ்ஞானபுரம் அருகே நலத்திட்ட முகாமில் பெண்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் வசதி செய்து கொடுத்த கனிமொழி எம்.பி. - பொதுமக்கள் பாராட்டு

    • நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு அடைக்கலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • தொடர்ந்து 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் என ரூ.20 லட்சத்து 23 ஆயிரத்து 88 அளவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    திருச்செந்தூர்:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட சோலை குடியிருப்பு, வள்ளி யம்மாள்புரம், அடைக்கலா புரம் ஆகிய பகுதிகளில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சாலை பணிகள் தொடங்கி வைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு அடைக்க லாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பயனாளி களுக்கு வருவாய் துறை சார்பில் 14 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 பேருக்கு கடன் உதவி தொகையும், மாற்றுத்திற னாளி நலத்துறை சார்பில் 2 பேருக்கு மூன்று சக்கர நாற்காலியும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள் 6 பேருக்கும், 6 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் என ரூ.20 லட்சத்து 23 ஆயிரத்து 88 அளவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் தங்கள் அடைக்கலாபுரம் ஊருக்கு பஸ் வசதி இல்லை. எங்களுக்கு பஸ் வசதி வேண்டும் என்று கேட்டார். உடனே கனிமொழி எம்.பி. நடவடிக்கை எடுப்பதாக கூறி மாலையிலே பஸ் விட ஏற்பாடு செய்து பஸ் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இம்முகாமில் சப்- கலெக்டர் குருசந்திரன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், யூனியன் சேர்மன் பாலசிங், ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, செம்ம றிக்குளம் பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம், வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×