search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எட்டயபுரத்தில் தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
    X

    மாட்டு வண்டி போட்டியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்த காட்சி. அருகில் அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    எட்டயபுரத்தில் தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் - கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

    • பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
    • கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து 2 பவுன் தங்க செயினை பரிசாக பெற்றது.

    எட்டயபுரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் எட்டயபுரம் நகர தி.மு.க சார்பில் இன்று காலை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடந்தது.

    போட்டியில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு 16 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    போட்டியை விளாத்தி குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடம்பூர் கருணாகராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்து 2 பவுன் தங்க செயினை பரிசாக பெற்றது.

    சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி 2-வது இடம் பிடித்து 1½ பவுன் தங்க செயினை பெற்றது. 3-வது இடம் பிடித்த நெல்லை மாவட்டம் வேலங்குளம் கண்ணன் மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க செயினும், 4-வது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார் மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியில் 22 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிக்கு 4½ கி.மீ. தூரம் நிர்ணயிக்கப் பட்டது. போட்டிகளை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகி யோர் கொடித்து தொடங்கி வைத்தனர்.

    போட்டியில் முதலிடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்க செயினும், 2-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ¾ பவுன் தங்க செயினும், 3-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ½ பவுன் தங்க செயினும் 4-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.

    இதில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், எட்டய புரம் பேரூர் செயலாளர் பாரதி கணேசன், கோவில் பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், எட்டயா புரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் மணி கண்டன், மைக்கேல் ராஜ், தி.மு.க. வார்டு செயலாளர் சின்னப்பர், ராம்குமார் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×