என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனிமொழி எம்.பி.,அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
உடன்குடி ஒன்றியத்தில் நாளை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா - கனிமொழி எம்.பி.- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர்
- நாளை காலை 9.30 மணிக்கு தென்திருப்பேரை பேரூராட்சியில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல் நடக்கிறது.
- தொடர்ந்து எல்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் மின்மாற்றி இயக்குதல் மற்றும் 13 பேட்டரி கார்கள் ஆகியவற்றை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
உடன்குடி:
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாளை (வியாழக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
அடிக்கல் நாட்டுவிழா
அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு தென்திருப்பேரை பேரூராட்சியில் 4 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல், ஆறுமுகநேரி பேருராட்சியில் மடத்துவிளை மற்றும் ராஜமன்னார்புரத்தில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு, காலை 10.30-க்கு ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு எதிர்புறம் உள்ள குப்பை கிடங்கை பார்வையிடுதல், காலை 10.45-க்கு காயல்பட்டினம் நகராட்சி அரசு மருத்துவமனையில் ரூ.62 கோடி மதிப்பு விரிவாக்க பணிகள் மற்றும் புதியசாலை பணிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
தொடர்ந்து எல்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் மின்மாற்றி இயக்குதல், புதிய பஸ் நிலையம் அருகில் 2350 எல்.இ.டி.விளக்கு அமைக்கும் பணி மற்றும் 13 பேட்டரி கார்கள் ஆகியவற்றை தொடங்கி வைக்கின்றனர். மாலை 4.30 மணிக்கு உடன்குடி ஒன்றியம் லட்சுமிபுரம் ஊராட்சி வேப்பங்காட்டில் மக்கள் களம் நிகழ்ச்சி மற்றும் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டுதல், மாலை 5.30-க்கு நயினார்பத்து, மாலை 6.30-க்கு சீர்காட்சி ஆகிய ஊர்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.






