search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராமப்புற பெண்களின் முன்னேற்றமே  அந்த நாட்டை உயர்த்தும் - கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    பயனாளிகளுக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

    கிராமப்புற பெண்களின் முன்னேற்றமே அந்த நாட்டை உயர்த்தும் - கனிமொழி எம்.பி. பேச்சு

    • நயினார்பத்து ஊராட்சியில் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம், ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
    • நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே ராமநாதபுரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு, வாகைவிளையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகள், நயினார்பத்து ஊராட்சியில் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டிடம், ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    இத்திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செய லர் உமரிசங்கர், திருச் செந்தூர் ஆர்.டி.ஓ. குரு சந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி ஊரா ட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆதி லிங்கம், அமுதவல்லி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் தங்கலட்சுமி, செந்தில், உடன்குடி பேரூ ராட்சி முன்னாள் உறுப்பி னர்கள் சலீம், அன்வர் சலீம் உட்பட திரளான ஊர் மக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழக அரசு கிராமப்புற பெண்களின் பொருளாதார

    முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகள் நன்கு இருந்தால் தான் முன்னேற்றம் ஏற்படும். கிராமப்புற பெண்களின் முன்னேற்றமே அந்த நாட்டை உயர்த்தும்.

    அதற்கேற்ப பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக பஸ் வசதி செய்து தரப்படும். பெண் களின் உரிமைத் தொகை தகுதி வாய்ந்த அனை வருக்கும் வருகிற செப் டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சுமார் ஆயிர த்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள், இல வச வீட்டு மனை பட்டாக்கள், தையல் எந்தி ரங்கள் ஆகியவற்றை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    Next Story
    ×