என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி அருகே வேப்பங்காட்டில் புதிய பஸ் சேவை தொடக்க விழா
    X

    புதிய பஸ் சேவை தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.

    உடன்குடி அருகே வேப்பங்காட்டில் புதிய பஸ் சேவை தொடக்க விழா

    • வேப்பங்காடு ஊர் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை எனவும், பஸ் வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர்.
    • அதன்படி இன்று காலை புதிய பஸ் வேப்பங்காடு ஊருக்கு வந்தது. பொதுமக்கள், சிறுவர்கள் உற்சாகமாக பஸ் பயணம் செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்காட்டில் மக்கள் களம் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது. இதில் கனிமொழி எம்பி., மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    நிகழ்ச்சியில் வேப்பங்காடு ஊர் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை எனவும் பஸ் வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர். ஒரு வாரத்தில் பஸ் வசதி செய்யப்படும் என மக்கள் களம் நிகழ்சியில் உறுதிமொழி கொடுக்க ப்பட்டது.

    அதன்படி இன்று காலை புதிய பஸ் வேப்பங்காடு ஊருக்கு வந்தது. பொதுமக்கள், சிறுவர்கள் உற்சாகமாக பஸ் பயணம் செய்தனர். இந்த பஸ் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வேப்பங்காடு வழியாக சாத்தான்குளத்திற்கு இயக்கப்படுகிறது. இன்று நடந்த பஸ் சேவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், உடன்குடி யூனியன் சேர்மனுமான பாலசிங் தலைமை தாங்கினார்.

    பாராட்டு

    லெட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் ஆதிலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் தங்கலெட்சுமி, உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் விஜயா, கிளை செய லாளர்கள் கோபால கிருஷ்ணன், ராஜ்குமார், மோகன், தி.மு.க. நிர்வாகிகள் ஐசக், ஜாம்டக்கர், முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் சேவை வழங்கிய கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×