என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New Bus Service"
- வேப்பங்காடு ஊர் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை எனவும், பஸ் வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர்.
- அதன்படி இன்று காலை புதிய பஸ் வேப்பங்காடு ஊருக்கு வந்தது. பொதுமக்கள், சிறுவர்கள் உற்சாகமாக பஸ் பயணம் செய்தனர்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்காட்டில் மக்கள் களம் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது. இதில் கனிமொழி எம்பி., மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
நிகழ்ச்சியில் வேப்பங்காடு ஊர் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை எனவும் பஸ் வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர். ஒரு வாரத்தில் பஸ் வசதி செய்யப்படும் என மக்கள் களம் நிகழ்சியில் உறுதிமொழி கொடுக்க ப்பட்டது.
அதன்படி இன்று காலை புதிய பஸ் வேப்பங்காடு ஊருக்கு வந்தது. பொதுமக்கள், சிறுவர்கள் உற்சாகமாக பஸ் பயணம் செய்தனர். இந்த பஸ் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வேப்பங்காடு வழியாக சாத்தான்குளத்திற்கு இயக்கப்படுகிறது. இன்று நடந்த பஸ் சேவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், உடன்குடி யூனியன் சேர்மனுமான பாலசிங் தலைமை தாங்கினார்.
பாராட்டு
லெட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் ஆதிலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் தங்கலெட்சுமி, உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் விஜயா, கிளை செய லாளர்கள் கோபால கிருஷ்ணன், ராஜ்குமார், மோகன், தி.மு.க. நிர்வாகிகள் ஐசக், ஜாம்டக்கர், முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் சேவை வழங்கிய கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து பஸ் சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் புதிய பஸ் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் நீண்ட நாட்களாக சங்கரன்கோவில் முதல் மருதங்கிணறு வரை பஸ் சேவையும், சங்கரன்கோவில் முதல் கழுகுமலை வரை பஸ் சேவையும் தேவை என கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து பஸ் சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் புதிய பஸ் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சங்கரன்கோவில் முதல் கழுகுமலை, சங்கரன்கோவிலில் இருந்து மருதங்கிணறு செல்லும் 2 பஸ் சேவைகளை தொடங்கி வைத்தனர். இந்த 2 பஸ் சேவைகள் மூலம் சுமார் 17 கிராம மக்கள் பயனடைவார்கள். 25 ஆண்டு காலம் நிறைவேறாமல் இருந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த ராஜா எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், பணிமனையை சேர்ந்த சுப்பிரமணியன், தொ.மு.ச. மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், தொ.மு.ச. சங்கர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செந்தில்குமார் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அழகுதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
