என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே 2 வழித்தடத்தில் புதிய பஸ் சேவை
    X

    புதிய பஸ் சேவையை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி

    சங்கரன்கோவில் அருகே 2 வழித்தடத்தில் புதிய பஸ் சேவை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து பஸ் சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் புதிய பஸ் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் நீண்ட நாட்களாக சங்கரன்கோவில் முதல் மருதங்கிணறு வரை பஸ் சேவையும், சங்கரன்கோவில் முதல் கழுகுமலை வரை பஸ் சேவையும் தேவை என கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து பஸ் சேவைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் புதிய பஸ் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சங்கரன்கோவில் முதல் கழுகுமலை, சங்கரன்கோவிலில் இருந்து மருதங்கிணறு செல்லும் 2 பஸ் சேவைகளை தொடங்கி வைத்தனர். இந்த 2 பஸ் சேவைகள் மூலம் சுமார் 17 கிராம மக்கள் பயனடைவார்கள். 25 ஆண்டு காலம் நிறைவேறாமல் இருந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த ராஜா எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், பணிமனையை சேர்ந்த சுப்பிரமணியன், தொ.மு.ச. மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், தொ.மு.ச. சங்கர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செந்தில்குமார் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அழகுதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×