search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே ரூ.3.10 கோடி மதிப்பீட்டில்  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா - கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
    X

    ராமனூத்து கிராமத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கனிமொழி எம்.பி. வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் உள்ளார்.

    விளாத்திகுளம் அருகே ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா - கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

    • எத்திலப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • பணிகளை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எத்திலப்ப நாயக்கன்பட்டி, தலை காட்டுப்புரம், நீராவி புதுப்பட்டி, ராமனூத்து உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் களம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்கண்டேயன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் எத்திலப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நல கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நீராவி புதுப்பட்டி-பருவக்குடியில் ரூ.198 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை, ராம னூத்து-பருவக்குடியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பணியை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக ்கொண்டார்.

    நிகழ்ச்சியில் விளாத்தி குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்தி ஒன்றிய செய லாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், எட்டயபுரம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் சுந்தர், ராமனூத்து ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், இம்மானுவேல், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உட்பட கலந்து கொண்டனர்.

    Next Story
    ×