search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanimozhi mp"

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
    • விழாவில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    விழாவில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கினார்.

    நிகழ்ச்சியில், ஓட்டப்பி டாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார்கள் முத்துமாரி, சங்கர நாராயணன், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், வீரபாண்டியன் பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்ல முத்து, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணா சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், ஜோசப், கொம்பையா, நவீன்குமார், பார்த்திபன், இளங்கோ, நகர செயலாளர் வாள் சுடலை, பகுதி செயலாளர் ஆஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேல திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி ஆகிய பஞ்சாயத்துக்களில் ‘மக்கள் களம்’நிகழ்ச்சி நடந்தது.
    • கடந்த காலங்களில் சத்துணவில் முட்டை வழங்குகிற திட்டத்தை தந்தவர் கலைஞர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர், பிச்சிவிளை, காயாமொழி ஆகிய பஞ்சாயத்துக்களில் 'மக்கள் களம்' என்ற மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்தில் நா. முத்தையாபுரத்திலும், பிச்சிவிளை பஞ்சாயத்தில் பிச்சிவிளையிலும், காயாமொழி பஞ்சாயத்தில் குமாரசாமிபுரத்திலும் நடந்தது.

    கனிமொழி எம்.பி.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    மேலும் பெண்களுக்கு தையல் எந்திரம், சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவிகள், மருத்துவ பெட்டகங்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ரூ. 60 லட்சத்து 5 ஆயிரத்து 712 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மொத்த 44 பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பொதுமக்களாகிய நீங்கள் எந்தவொரு மனு அளிப்பதற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் கலெக்டர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினராகிய நான் (கனிமொழி எம்.பி.), அரசு அலுவலர்கள் உங்கள் கிராமத்திற்கே வந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கான முயற்சி தான் மக்கள்களம் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இலவச பஸ் பயணம்

    தமிழ்நாடு அரசு தான் பெண்களுக்கு டவுன் பஸ்களில் கட்டணம் இல்லாமல் பஸ் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்களுடைய உழைப்பை மதிக்கக் கூடிய வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. சாலைவசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான திட்டப்பணி கள் நடந்து வருகிறது.

    இவ்வாறு கனிமொழி பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    கடந்த காலங்களில் சத்துணவில் முட்டை வழங்குகிற திட்டத்தை தந்தவர் கலைஞர். தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார் என்று பேசினார்.

    மாலையில், கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமலி நகரில் உள்ள மீனவர்கள் 12 பேர் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆன்றோ, பொங்கலரசி, பஞ்சாயத்து தலைவர்கள் மகாராஜன் (மேல திருச்செந்தூர்), ராஜேஸ்வரன் (காயாமொழி), காயாமொழி சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசில் நூகு, மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குரங்கணி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி., தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தென்திருப்பேரை:

    ஏரல் வட்டத்திற்கு உட்பட்ட குரங்கணி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ரூ.52 லட்சம் மதிப்பில்

    குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெயமுருகன் தலைமையில் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ரூ.52 லட்சம் மதிப்பில் மொத்தம் 44 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாய நகை கடன், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்தீபன், மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், ஆழ்வை மத்திய செயலாளர் நவீன் குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி, துணை அமைப்பாளர் லின்சி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆழ்வார்திரு நகரில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், தென் திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், ஆழ்வை கிழக்கு ஒன்றிய துணை பொறுப்பாளர் முத்துராஜா, குரங்கணி தி.மு.க. கிளைச் செய லாளர்கள் ரவி என்ற பெரியசாமி, சித்திரைவேல், ராஜ பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

    • சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் மேலூர் மாநகராட்சி நடுநிலை பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் மேலூர் மாநகராட்சி நடுநிலை பள்ளி களுக்கான கூடுதல் வகுப்பறை கட்டி டம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    மாவட்ட கனிமவள நிதி மற்றும் என் .டி. பி. எல். தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூக கூட்டான்மை பொறுப்பு நிதி ஆகியவற்றின் மூலம் கட்டிடங்கள் கட்டுவதற்கான விழா சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டு ராஜா,நகரமைப்பு குழு தலைவர் ராம கிருஷ்ணன் மற்றும் மாநகர கவுன்சி லர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, ெநல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வெள்ளி விழா நடந்தது.
    • ஒரு செயலில் இருந்து திரும்பி போவது, விட்டு விடுவது என்ற எண்ணத்தை உங்களது மனதில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வெள்ளி விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெள்ளி விழா மலரையும் வெளியிட்டு அவர் பேசியதாவது:-

    உங்கள் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி சைக்கிள் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். மேலும் காமன்வெல்த், ஆசியன் விளையாட்டு போட்டி களிலும் பங்கேற்று இருக்கிறார். தற்போது கொலம்பியா நாட்டில் நடை பெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டி யிலும் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார்.

    வெற்றி நிச்சயம்

    அதேபோல் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சிறப்பாக செயல்பட்டு மனம் தளராமல் தொடர்ந்து செயலாற்றி வந்தால் நிச்சயமாக ஸ்ரீமதி போல் வெற்றி பெற முடியும்.

    என்னுடைய தந்தை கலைஞர் தமிழ்நாட்டில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்து உள்ளார். அவர் கண்டிராத தோல்வியும் இல்லை. வெற்றியும் இல்லை. அவர் தோல்வியை கண்டு துவண்டு போனது இல்லை. நான் எனது தந்தையிடம் இருந்து கற்று கொண்ட பாடம் இதுதான். மேலும் ஒரு செயலில் இருந்து திரும்பி போவது, விட்டு விடுவது என்ற எண்ணத்தை உங்களது மனதில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், யூனியன் ஆணையாளர் சிவபாலன் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மாப்பிள்ளையூரணியில் ரூ.10.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
    • இந்த பகுதியில் ரூ. 13 கோடியே 32 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணியில் ரூ.10.13 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார் வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பல்நோக்கு கட்டிடம்

    பின்னர் சிலோன் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 11.77 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். பின்னர் வடக்கு சோட்டையன் தோப்பில் உள்ள அம்பேத்கார் படிப்பகத்தை பார்வையிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அப்பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பூப்பாண்டியாபுரத்தில் ரூ. 12.30 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை கட்டிடத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

    ரூ.2 கோடி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அடிக்கடி சொல்வது எல்லாம் கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறுவார். அதனடிப்படையில் இந்த பகுதியில் ரூ. 13 கோடியே 32 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    இந்த பகுதியில் முதல்-அமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடிக்கு மேல் ஓதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. மின் மயானம் பணியும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கல்வி, வளர்ச்சி என அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கின்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீங்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், துணை கலகெ்டர் (பயிற்சி) பிரபு, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி அலுவலர் மகேஸ்வரி, பொறியாளர் தளவாய், மேற்பார்வை யாளர் முத்துராமன், பொதுவிநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், துணை பதிவாளர் மாரியப்பன், செயலாட்சியர் சாம் டேனியல்ராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடநல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, ராமசந்திரன், ஹரிபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஆனந்தி, ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மகேஸ்வரி, சக்திவேல், ஜேசுராஜா, பாண்டியம்மாள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
    • மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 819 மாணவ,மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.

    கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

    இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறிய கனிமொழி எம்.பி. தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

    இப்பள்ளியில் மொத்தம் 125 மாணவ- மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர்.

    கலந்து கொண்டவர்கள்

    முன்னதாக நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் கவுரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீரபுத்திரன், தாசில்தார் பிரபாகரன், தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, அய்யனடைப்பு ஊராட்சி தலைவர் அதிஷ்ட கணபதி ராஜேந்திரன், துணைத் தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்கொடி, துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குப்பனாபுரம் உள்ளிட்ட ஊர்களில் நடந்த மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி , தேவைகளை கேட்டறிந்து அதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
    • நிகழ்ச்சியில் குப்பனாபுரம் கிராமத்தில் 22 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, கல்வி உதவித் தொகைகளை வழங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் துணை வேளண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்ட கனிமொழி எம்.பி., தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.

    புதிய கட்டிடம் திறப்பு

    இந்நிலையில் நேற்று புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து குப்பனாபுரம், தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம், கொப்பம்பட்டி ஆகிய ஊர்களில் நடந்த மக்கள்களம் நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு என்ன தேவைகளை கேட்டறிந்து அதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    22 பேருக்கு இலவச வீட்டுமனை

    நிகழ்ச்சியில் குப்பனாபுரம் கிராமத்தில் 22 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகைகளையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் கயத்தாறு தாசில்தார் நாகராஜன், முன்னாள் கடம்பூர் பேரூராட்சிமன்ற தலைவர் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர்கள் ராஜதுரை, விஸ்வநாத் ராஜா, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், பேரூர் செயலாளர்கள் கயத்தாறு சுரேஷ்கண்ணன், கடம்பூர் பாலகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் கனகராஜ், துணை தலைவர் சுப்புராஜ், பேரூராட்சிமன்ற கவுன்சிலர்கள் நயினார், செல்வகுமார், மாரீஸ்வரி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வக்கீல் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் மோகன், ஒன்றிய துணைச் செயலாளர் பொன்னுசாமி, கடம்பூர் வருவாய் ஆய்வா ளர் பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடியது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தான். யாராக இருந்தாலும் ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது மிகப்பெரிய கனவு என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    ரூ. 500 கோடி இலக்கு

    நாட்டின் பொருளாதாரம் 35 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சார்ந்து தான் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஏற்றுமதியில் 45 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்கு உள்ளது. இந்த தொழில்களின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அதிக பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவது கிடையாது. ஏனென்றால் அவை தொழில்நுட்பங்கள் சார்ந்தவை. ஆனால் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடியது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தான். யாராக இருந்தாலும் ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது மிகப்பெரிய கனவு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் எல்லாம் கடன் வழங்குவதற்கான இலக்கினை அடையவில்லை.

    திருப்பூர் மாவட்டம் ரூ. 400 கோடி அளவிற்கு கடன் வழங்கியிருக்கிறது. நாம் தற்போது ரூ. 315 கோடி மதிப்பில் கடனுதவியினை இன்று வழங்குகின்றோம். எனவே நம்முடைய அடுத்த இலக்கு ரூ. 500 கோடியாக இருக்க வேண்டும். சிறு. குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பட்ஜெட்டில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். சிறு. குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறப்பானதாக, தனித்துவமாக நாம் உருவாக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாற முடியும். நமது மாவட்டத்தை எல்லோரும் திரும்பி பார்க்கும் மாவட்டமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றக்கூடிய திறமை உங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

    அமைச்சர் கீதாஜீவன் கூறும்போது, இன்றைய முகாமில் 3,145 பேருக்கு 315 கோடி கடன் ஆணை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் இளைஞர்கள் வேலை வாங்குபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவார். நீங்கள் துணிந்து தொழில் தொடங்கினால் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். மாவட்ட தொழில் மையம், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலம் அதிக தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்று அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள்.

    அந்நிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் என ரூ. 2 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. நமது மாவட்டத்தில் அதிக அளவு தொழில் தொடங்க கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் காலத்தில் 215 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு மீண்டும் இன்று உரிமைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது எனஅவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் பிரபாகர், மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி துரைராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சி லர்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், முத்துமாரி, ரவிசந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் பாலன், சுப்பையா மற்றும் கருணா, பிரபாகர், அல்பட், தமிழ்நாடு பணைபாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடி, மாவட்ட தொழில் மையத்தில் வள அலுவலர்கள் பானுமதி, ஷெகினா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கு வசதியாக குளக்கரையினை பலப்படுத்தி அதன் அருகில் நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
    • மாநகராட்சி திட்டத்தின் கீழ் குளத்தின் கரையோரப் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மீளவிட்டானில் உள்ள சி.வ.குளம் தூர்வாரப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நடைபாதை திறப்பு

    இதன் தொடர்ச்சியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு வசதியாக குளக்கரையினை பலப்படுத்தி அதன் அருகில் நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள் ளப்பட்டு அதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடை பாதையினை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழக சமூகநலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபாதையை திறந்து வைத்தனர்.

    மரக்கன்று நடுதல்

    மேலும் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநகராட்சி திட்டத்தின் கீழ் குளத்தின் கரையோரப் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ஸ்டாலின் பாக்கிய நாதன், மாநகராட்சி பணிக் குழு தலைவர் கீதாமுருகேசன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சி லர்கள் மும்தாஜ், அந்தோணி மார்ஸ்லின், காந்திமணி, என்ஜினீயர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், கமிஷனரின் நேர்முக உதவி யாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், தாசில்தார் பிரபாகர், பகுதி தி.மு.க. செயலாளர் சிவ குமார், மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், தி.மு.க. வட்டச்செய லாளர்கள் ரவிந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் சுயமாக சம்பாதித்து தங்களது சொந்தக்காலில் நிற்கக் கூடிய அளவிற்கு ஒரு தொழில் வளாச்சி பெறக் கூடிய நிலையை தந்திருக்கக் கூடிய திட்டமாக இன்று பணிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
    • வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான திட்டமான மக்களைத்தேடி மருத்துவ திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்ப ட்டுள்ள பணிக்கூட த்தினை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    கனிமொழி எம்.பி.

    நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கனிமொழி எம்பி பேசியதாவது:-

    பெண்கள் சுயமாக சம்பாதித்து தங்களது சொந்தக்காலில் நிற்கக் கூடிய அளவிற்கு ஒரு தொழில் வளாச்சி பெறக் கூடிய நிலையை தந்திருக்கக் கூடிய திட்டமாக இன்று பணிக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது. கலைஞர் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி தந்தவர். மகளிர்கள் இந்த கட்டிடத்தை பயன்படுத்தி கடலை மிட்டாய் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு செய்து தரப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு கல்லூரி படிப்பிற்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்ட ங்களை செயல்படுத்தி கொண்டி ருக்கிறார்.

    மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்து கொண்டி ருக்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான திட்டமான மக்களைத்தேடி மருத்துவ திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களை பாதுகாக்கும் ஆட்சி

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கலைஞர் எப்படி நிறை வேற்றி தந்தாரோ அதே போல் அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு எல்லோருக்குமான ஆட்சியாகவும், முக்கியமாக பெண்களை பாதுகாக்கிற ஆட்சியாகவும் விளங்கி வருகிறது. மேலக்கரந்தை பகுதியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ரூ. 1.90 கோடி மதிப்பில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால்கள் போன்ற மக்களின் அடிப்படை வசதிக்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அரசின் திட்டங்களை பெற்று உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×