search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு - கனிமொழி எம்.பி. வழங்கினார்
    X

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளி ஒருவருக்கு ஏ.டி.எம். கார்டை கனிமொழி எம்.பி. வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ.,கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் உள்ளனர்.

    திருச்செந்தூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு - கனிமொழி எம்.பி. வழங்கினார்

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
    • விழாவில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    விழாவில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கினார்.

    நிகழ்ச்சியில், ஓட்டப்பி டாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார்கள் முத்துமாரி, சங்கர நாராயணன், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், வீரபாண்டியன் பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்ல முத்து, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணா சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், ஜோசப், கொம்பையா, நவீன்குமார், பார்த்திபன், இளங்கோ, நகர செயலாளர் வாள் சுடலை, பகுதி செயலாளர் ஆஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×