search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magalir Urimai thogai Scheme"

    • பெண்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
    • சிலர் தங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததால் பிரச்சனை உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் உதவி மையம் அமைக்கப்ப ட்டுள்ளது.

    அமைச்சர் ஆய்வு

    அதன் செயல்பாடுகள் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தூத்துக்குடி சப்-கலகெ்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் வாயிலாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    வங்கி கணக்கு பிரச்சினை

    பெண்கள் இம்முகாம் களில் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம். சிலருக்கு வங்கி கணக்கில் பிரச்சனை உள்ளது. சிலர் தங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததால் பிரச்சனை உள்ளது. சிலர் மேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கீழுர் தொ டக்க வேளாண்மை கூட்டு றவு வங்கியில் கணக்கு தொடங்கி யுள்ளார்கள்.

    மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வே ண்டும். சிலர் தபால் நிலை யங்களில் கணக்கு வைத்து ள்ளார்கள். இதுபோன்ற வங்கி கணக்கு தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் உள்ளது.

    எனவே இதுமாதிரியான தவறையெல்லாம் ஆன்லைனில் சரி செய்யும் பணிகள் இந்த முகாம் மூலம் நடைபெற்று வரு கிறது. கள ஆய்வு பணியின் போது சிலரும், வருமான வரி செலுத்திய தாலும் சிலருக்கும் விண்ணப்ப படிவங்கள் தள்ளுபடி செய்யப்பட்டி ருக்கிறது. இன்னும் 30 நாட்கள் இருப்பதால் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு செய்வ தற்கான கட்ட ணங்கள் எதுவும் இ-சேவை மைய த்தில் வசூலிக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் தெரிவித்து ள்ளார்

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வில் டி.ஆர்.ஓ. அஜய் சீனிவாசன், தாசில்தார்கள் பிரபாகரன், ஜான்சன், தேவசகாயம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் கந்தசாமி, ராமுத்த ம்மாள், வட்ட செயலாளர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி மாக்கின் ராபட் மற்றும் கருணா, மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
    • விழாவில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    விழாவில், கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கினார்.

    நிகழ்ச்சியில், ஓட்டப்பி டாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார்கள் முத்துமாரி, சங்கர நாராயணன், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், வீரபாண்டியன் பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்ல முத்து, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணா சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், ஜோசப், கொம்பையா, நவீன்குமார், பார்த்திபன், இளங்கோ, நகர செயலாளர் வாள் சுடலை, பகுதி செயலாளர் ஆஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த வாரம் புறநகர் பகுதிகளில் வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
    • 55 வார்டுகளிலும் கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று அவர்கள் வழங்கினர்.

    நெல்லை:

    தி.மு.க. சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர்க்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த மாதம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தமிழகம் முழுவதும் வீடு வீடாக மகளிர் உதவி தொகைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் மற்றும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. கடந்த வாரம் அனைத்து மாவட்டங்களிலும் புறநகர் பகுதிகளில் சென்று வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் மாநகர பகுதிகளில் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

    நெல்லை மாநகர பகுதியில் இதற்கென கூட்டுறவு பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    வீடு, வீடாக...

    குழுக்களாக பிரிந்து மாநகரப் பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் கலைஞர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வீடு, வீடாக சென்று அவர்கள் வழங்கினர். இன்று வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், சாலை தெரு, மீனாட்சிபுரம், சிந்து பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த டோக்கன்களில் எந்தெந்த தேதிகளில் யார்-யார் வர வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் எழுதப்பட்டி ருந்தது.

    அதன்படி குறித்த நேரத்தில் பெண்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×