என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆய்வின்போது அமைச்சர் கீதாஜீவன் உதவி மையத்திற்கு வந்த பெண்களிடம் குறைகளை கேட்டு விளக்கமளித்த காட்சி.
தூத்துக்குடியில் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
- பெண்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
- சிலர் தங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததால் பிரச்சனை உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் உதவி மையம் அமைக்கப்ப ட்டுள்ளது.
அமைச்சர் ஆய்வு
அதன் செயல்பாடுகள் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தூத்துக்குடி சப்-கலகெ்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் வாயிலாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
வங்கி கணக்கு பிரச்சினை
பெண்கள் இம்முகாம் களில் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம். சிலருக்கு வங்கி கணக்கில் பிரச்சனை உள்ளது. சிலர் தங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததால் பிரச்சனை உள்ளது. சிலர் மேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கீழுர் தொ டக்க வேளாண்மை கூட்டு றவு வங்கியில் கணக்கு தொடங்கி யுள்ளார்கள்.
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வே ண்டும். சிலர் தபால் நிலை யங்களில் கணக்கு வைத்து ள்ளார்கள். இதுபோன்ற வங்கி கணக்கு தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் உள்ளது.
எனவே இதுமாதிரியான தவறையெல்லாம் ஆன்லைனில் சரி செய்யும் பணிகள் இந்த முகாம் மூலம் நடைபெற்று வரு கிறது. கள ஆய்வு பணியின் போது சிலரும், வருமான வரி செலுத்திய தாலும் சிலருக்கும் விண்ணப்ப படிவங்கள் தள்ளுபடி செய்யப்பட்டி ருக்கிறது. இன்னும் 30 நாட்கள் இருப்பதால் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு செய்வ தற்கான கட்ட ணங்கள் எதுவும் இ-சேவை மைய த்தில் வசூலிக்கக் கூடாது என்று முதல்-அமைச்சர் தெரிவித்து ள்ளார்
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வில் டி.ஆர்.ஓ. அஜய் சீனிவாசன், தாசில்தார்கள் பிரபாகரன், ஜான்சன், தேவசகாயம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் கந்தசாமி, ராமுத்த ம்மாள், வட்ட செயலாளர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி மாக்கின் ராபட் மற்றும் கருணா, மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






