search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் ஆர்வம் உள்ள துறையில் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்  - பள்ளி விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    பள்ளி வெள்ளி விழா மலரை கனிமொழி எம்.பி வெளியிட்ட போது எடுத்த படம். அருகில் அமைச்சர் கீதாஜீவன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளனர்.

    மாணவர்கள் ஆர்வம் உள்ள துறையில் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் - பள்ளி விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு

    • ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வெள்ளி விழா நடந்தது.
    • ஒரு செயலில் இருந்து திரும்பி போவது, விட்டு விடுவது என்ற எண்ணத்தை உங்களது மனதில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வெள்ளி விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெள்ளி விழா மலரையும் வெளியிட்டு அவர் பேசியதாவது:-

    உங்கள் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி சைக்கிள் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். மேலும் காமன்வெல்த், ஆசியன் விளையாட்டு போட்டி களிலும் பங்கேற்று இருக்கிறார். தற்போது கொலம்பியா நாட்டில் நடை பெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டி யிலும் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார்.

    வெற்றி நிச்சயம்

    அதேபோல் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சிறப்பாக செயல்பட்டு மனம் தளராமல் தொடர்ந்து செயலாற்றி வந்தால் நிச்சயமாக ஸ்ரீமதி போல் வெற்றி பெற முடியும்.

    என்னுடைய தந்தை கலைஞர் தமிழ்நாட்டில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்து உள்ளார். அவர் கண்டிராத தோல்வியும் இல்லை. வெற்றியும் இல்லை. அவர் தோல்வியை கண்டு துவண்டு போனது இல்லை. நான் எனது தந்தையிடம் இருந்து கற்று கொண்ட பாடம் இதுதான். மேலும் ஒரு செயலில் இருந்து திரும்பி போவது, விட்டு விடுவது என்ற எண்ணத்தை உங்களது மனதில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், யூனியன் ஆணையாளர் சிவபாலன் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×