search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சி குளக்கரையில்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய நடைபாதை - கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தனர்
    X

    புதிய நடைபாதையை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் திறந்து வைத்தனர். அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் உள்ளனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி குளக்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய நடைபாதை - கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தனர்

    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கு வசதியாக குளக்கரையினை பலப்படுத்தி அதன் அருகில் நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
    • மாநகராட்சி திட்டத்தின் கீழ் குளத்தின் கரையோரப் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மீளவிட்டானில் உள்ள சி.வ.குளம் தூர்வாரப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நடைபாதை திறப்பு

    இதன் தொடர்ச்சியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு வசதியாக குளக்கரையினை பலப்படுத்தி அதன் அருகில் நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள் ளப்பட்டு அதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நடை பாதையினை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழக சமூகநலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபாதையை திறந்து வைத்தனர்.

    மரக்கன்று நடுதல்

    மேலும் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநகராட்சி திட்டத்தின் கீழ் குளத்தின் கரையோரப் பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ஸ்டாலின் பாக்கிய நாதன், மாநகராட்சி பணிக் குழு தலைவர் கீதாமுருகேசன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சி லர்கள் மும்தாஜ், அந்தோணி மார்ஸ்லின், காந்திமணி, என்ஜினீயர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், கமிஷனரின் நேர்முக உதவி யாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், தாசில்தார் பிரபாகர், பகுதி தி.மு.க. செயலாளர் சிவ குமார், மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், தி.மு.க. வட்டச்செய லாளர்கள் ரவிந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×