search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kadayanallur"

    • மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி 12- ம் வகுப்பு படிக்கும் மாணவி சப்ரீன் வேதியியலில் உள்ள 118 தனிமங்களின் பெயரை சில விநாடிகளில் கூறினார்.
    • கின்னஸ் உள்ளிட்ட உலக சாதனைக்காக முயற்சி செய்து வருவதாகவும் மாணவி சப்ரீன் தெரிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி 12- ம் வகுப்பு படிக்கும் மாணவி சப்ரீன், பள்ளி தாளாளர் ஹஸன் மக்தூம், தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் வேதியியலில் உள்ள 118 தனிமங்களின் பெயரை சில விநாடிகளில் கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் ஆசிரியர் முகமது இர்சாத், உதவி தலைமை ஆசிரியர்கள் முகம்மது மசூது, ஹபிபுல்லா, ஆசிரியர்கள் முகம்மது தஸ்லீம், செய்யது மசூது உள்ளிட்டோர் செய்திருந்தனர். வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயரை 11 நொடி முதல் 12 நொடிக்குள் சொல்லி முடிப்பதாகவும், இதில் கின்னஸ் உள்ளிட்ட உலக சாதனைக்காக முயற்சி செய்து வருவதாகவும் மாணவி சப்ரீன் தெரிவித்தார்.

    • மணிகண்டன் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார்.
    • எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடையநல்லூர்:

    புளியங்குடி அருகே உள்ள மேலப்புளியங்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த நண்பரான அருண்குமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு குற்றாலத்திற்கு சென்றபோது சொக்கம்பட்டி போலீஸ் நிலையம் அருகே எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த அருண்குமார், மணிகண்டன் ஆகிய 2 பேரும் இறந்தனர்.இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருவேங்கடத்தை சேர்ந்த மாவீரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 7 மாதங்கள் கடையநல்லூர் நகராட்சிக்கு புதிதாக நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது.
    • இதையடுத்து புளியங்குடி நகராட்சியில் பணியாற்றிய சுகந்திக்கு பதவி உயர்வு அளித்து கடையநல்லூர் முதல் நிலை நகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் கடந்த ஜனவரி மாதம் தலைமை செயலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் கடந்த 7 மாதங்கள் கடையநல்லூர் நகராட்சிக்கு புதிதாக நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர்கள் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தனர். கடையநல்லூர் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு நிரந்தரமான புதிய ஆணையாளர் நியமிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புளியங்குடி நகராட்சியில் பணியாற்றிய சுகந்திக்கு பதவி உயர்வு அளித்து கடையநல்லூர் முதல் நிலை நகராட்சி ஆணையராக தமிழக அரசு நியமனம் செய்தது. இதனைத்தொடர்ந்து நேற்று கடையநல்லூர் நகராட்சி ஆணையராக சுகந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சி பொறியாளர் ஜீவா, இளநிலை பொறியாளர் முரளி, மேலாளர் சண்முகவேலு அல்லி பாத்திமா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கரன், கணக்கர் துரை, ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா மற்றும் நகராட்சி ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • உயிருக்கு போராடுபவர்களை மீட்பது குறித்து மாணவ- மாணவிகளுக்கு ஒத்திகை நிகழ்த்தி காட்டப்பட்டது.
    • தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

    கடையநல்லூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்க ளையும், கட்டிட இடிபாடு களில் சிக்கியவர்க ளையும் மீட்பது எப்படி திடீரென ஏற்பட்ட தீயை அணைப்பது எப்படி, அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி கடைய நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    கல்லூரிகளின் முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா மாணவ- மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், கல்லூரியின் பேராசிரி யர்கள் குருசித்திர சண்முக பாரதி, சண்முகப்பிரியா, சாம்சன் லாரன்ஸ், சண்முக வடிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தக்காளி பயிரிடுவது காலதாமதம் ஆனது.
    • தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து வருவதாக காய்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையநல்லூர், சுரண்டை, சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக குவியும்.

    தற்போது தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையான நிலையில் சமீபத்தில் ரூ.100 வரை விற்கப்பட்டது.

    இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளிக்கு பதிலாக புளி கரைசல் அதிமாக சேர்த்து சமையல் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளி விலை சற்று குறைந்தது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.100 வரையிலும் விலை உயர்ந்தது. தக்காளி விளைச்சல் குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து வருவதாக காய்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    இதுகுறித்து காசிதர்மம் விவசாயி முருகன் கூறுகையில், இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருந்ததால் தக்காளி பயிரிடுவது காலதாமதம் ஆனது. தற்போது ஏராளமான விவசா யிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். இன்னும் 15 நாட்களுக்குள் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்தொடங்கிவிடும். அதன் பின்னர் விலையும் குறைய தொடங்கும். தற்போது அரை ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளேன். தினமும் 100 கிலோவில் இருந்து 200 கிலோ வரை தக்காளி பறிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வருகிறேன். கிலோவிற்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விலை கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

    நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. இன்றைய நிலவரப்படி நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் ரூ.90 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படுவதாகவும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.110 வரையிலும் விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இவை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
    • குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கோடை விடுமுறை முடிந்து நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ -மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக பள்ளி மேலாண்மைக்குழு திருமலை வடிவு வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மணிமாறன், வட்டாரக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் முத்துலெட்சுமி, ராமகிருஷ்ணன், மாரி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் தேவராஜ், வட்டார ஆசிரியர் பயிற்றுனர் வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஆயிஷா பானு நன்றி கூறினார்.

    • வாகனங்கள் குறித்த விபரங்கள் தரவு தளங்களில் சேமித்து வைக்கும்.
    • இந்த தொழில் நுட்பத்தில் பரிவாகன் தளமும் இணைக்க ப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விபரங்களை விரைவாக பெற முடியும்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு பெண்கள் பெண் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சிக்னல்கள் இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    எஸ்.பி. தொடங்கி வைத்தார்

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கி தானியங்கி சிக்னல்களை இயக்கி வைத்தார். அதன்படி தென்காசி- மதுரை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி மாணவிகள் செல்வதற்கு வசதியாக பாதசாரிகள் சிக்னல் மற்றும் கிருஷ்ணாபுரம் குறுகிய சாலை பகுதியில் இரு புறமும் சிக்னல்கள் இயக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கூறியதாவது:-

    இந்த சிக்னல்களில் தானியங்கி காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் இந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை படம் பிடித்து கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும். அங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் சிக்னலை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள், மூன்று பேருடன் செல்லும் வாகனங்களை சரி பார்த்து அபராதம் விதிப்பர்.

    போக்குவரத்து விதிமீறல்

    அது போல் காவல்துறை யினர் இல்லாமலேயே போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பதிவு செய்து அவர்களுக்கான அபராதத்தையும் குறுஞ்செய்தி யாக இத்தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.

    ஐடிஎம்எஸ். தொழில் நுட்பத்துடன் செயல்படும் இந்த தானியங்கி காமிராக்கள் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் குறித்த விபரங்கள் தரவு தளங்களில் சேமித்து வைக்கும். இதன் மூலம் ஏற்கெனவே குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாகனங்கள், திருட்டு வாகனங்கள் குறித்து ஒப்பீடு செய்து அது குறித்த எச்சரிக்கை செய்தியை காவல்துறைக்கு இந்த தொழில்நுட்பம் அனுப்பி வைக்கும்.

    இந்த தொழில் நுட்பம் போக்குவரத்து துறையின் பரிவாகன் தளமும் இணைக்க ப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விபரங்களை விரைவாக காவல்துறையினர் தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் காவல் உள்கோட்டத்தில் 2 இடங்களில் இது போன்ற செயற்கை நுண்ணறியுடன் கூடிய தானியங்கி காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் தானியங்கி காமிராக்கள் தேவைப்படும் இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, தென்காசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, கிருஷ்ணன், தொழிலதிபர்கள் அமானுல்லா, செல்வம், ரவிச்சந்திரன், பகதூர்ஷா, தானியங்கி சிக்னல் டெக்னிக்கல் பிரிவு என்ஜினீ யர்கள் அஜீஸ், ஜீவிதா, ராமலிங்கம் சண்முகம் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
    • 9-ம் திருநாளான நேற்று அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடந்தது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி அம்பாள் தீர்த்த உற்சவம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் கும்பஜெபம் ,ஹோமம், அபிஷேகம் ,தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் ஆடல், பாடல், செண்டைமேளம், இன்னிசைக் கச்சேரி ,வில்லுப்பாட்டு என ஒவ்வொரு நாளும் இரவில் நடைபெற்றது. அதன் பின்னர் இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.விழாவின் 9-ம் திருநாளில் நேற்று அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம்,மதியம் முப்பிடாதி அம்மன் கோவில் சன்னதி முன்பிருந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். நியூ பஜார், மெயின் பஜார், தேசிய நெடுஞ்சாலை, முப்பிடாதி அம்மன் கோவில் தெரு என பிரதான இடங்களில் தேரோட்டம் நடைபெற்றது. இரவில் ஊஞ்சல் தீபாராதனை நடைபெற்றது. தேரோட்டத்தில் கிருஷ்ணாபுரம், மேலக்கடையநல்லூர், மாவடிக்கால் ,முத்துகிருஷ்ணாபுரம், பண்பொழி, திருமலை கோவியில், அச்சன்புதூர், செங்கோட்டை என பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மெகா துப்புரவு பணி விழிப்புணர்வு பேரணி கடையநல்லூர் சார் பதிவு அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் இளங்கோ வரவேற்று பேசினார். 

    நகர்மன்றத் தலைவர் ஹபிபூர் ரஹ்மான் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அதன் பின்னர்  தமிழக அரசின் மஞ்சள் பை உபயோகம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார் . அதன் பின்னர் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றினார்.

     நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா,   நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ -மாணவிகள், தாருஸ்ஸலாம் பள்ளி மாணவ- மாணவிகள் , நகர்மன்ற உறுப்பினர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள்,காவல் துறை அதிகாரிகள், தூய்மை இந்திய திட்டம் மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்  பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் பிரசித்திபெற்ற குறுக்கிட்டான் கருப்பசுவாமி கோவில் கொடை விழாவில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் பிரசித்திபெற்ற குறுக்கிட்டான் கருப்பசுவாமி கோவில் கொடைவிழா கடந்த 27-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. 

    தொடர்ந்து முதல்நாளான நேற்று முன்தினம் காலை   கணபதிஹோமம், வருஷாபிஷேகம் நடந்தது. மாலை  குடியழைப்பு, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல்,  அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, வில்லிசை, நள்ளிரவு பூஜை நடந்தது. 

    தொடர்ந்து 2-ம் நாளான நேற்று காலை  பெரியநாயகம் கோவில் மற்றும் குற்றாலம் தீர்த்தம் எடுத்து வர புறப்படுதல், மாலை 3மணிக்கு வாணவேடிக்கை முழங்க முளைப்பாரி, பால்குடம் ரதவீதி ஊர்வலம் நடந்தது. மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் பூக்குழிஇறங்கினர். இரவு  12மணிக்கு நள்ளிரவு பூஜை நடந்தது. 

    தொடர்ந்து இன்று  4-ம் தேதிகாலை 7மணிக்கு முளைப்பாரி கரைத்தல், 11 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. விழாவில் கிருஷ்ணாபுரம், கடையநல்லூர்,  மேலக்கடையநல்லூர்,  புளியங்குடி, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடையநல்லூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    கடையநல்லூர்:

    நெல்லை வன உயிரின சரணாலயம் மற்றும் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வன ரேஞ்சர் சுரேஷ் தலைமை தாங்கினார். மேல்நிலைப்பள்ளி முதல்வர் மங்களத்துரை வரவேற்று  பேசினார். சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான்  மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். 

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் முஹைதீன் கனி, முஹம்மது அலி, முருகன், வனவர் முருகேசன், அம்பலவாணர், வனக் காப்பாளர்கள் அய்யப்பன், ராமச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கடையநல்லூர் தாலுகா பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் தாலுகாவில்  ஜமாபந்தி தொடங்கியது. கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாய கணக்கு ஆய்வு (ஜமாபந்தி) நேற்று (செவ்வாய்க்கிழமை) புளியங்குடி குறு வட்டத்திற்கும் இன்று (புதன்கிழமை) ஆய்க்குடி குறுவட்டத்திற்கும் நடந்தது.26-ந் தேதி (வியாழக் கிழமை) கடையநல்லூர் குறு வட்டத்திற்கு  நடை பெறுகிறது.

    31 கிராமப்பகுதிகளிலுள்ள வருவாய் கணக்குகளை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைம தாங்கினார். கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த், சமூகநல தாசில்தார் அழகப்பராஜா,  ஆர்.டி.ஓ.  நேர்முக உதவியாளர் ராம்குமார்,

    கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரலிங்கம் , மண்டல துணை தாசில்தார் ராஜாமணி,  ஹெட் சர்வேர் சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளர் காசி லட்சுமி, புளியங்குடி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆய்குடி வருவாய்  ஆய்வாளர் சங்கரஈஸ்வரி ஆகியோர் கணக்கு தீர்வாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.  

    நிகழ்ச்சியில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிக அளவு முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். முன்னதாக ஆர்.டி.ஓ. கங்காதேவி தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
    ×