search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal School"

    • மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
    • குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கோடை விடுமுறை முடிந்து நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ -மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக பள்ளி மேலாண்மைக்குழு திருமலை வடிவு வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மணிமாறன், வட்டாரக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் முத்துலெட்சுமி, ராமகிருஷ்ணன், மாரி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் தேவராஜ், வட்டார ஆசிரியர் பயிற்றுனர் வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை ஆயிஷா பானு நன்றி கூறினார்.

    • நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் அசத்தினர்.
    • மாணவ- மாணவிகள், பெற்றோர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள நக ராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கருணாநிதி, துணை தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டி, கல்வி மற்றும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் அசத்தினர். காந்தி, நேரு, வ.உ.சி. என தலைவர்கள் வேடமணிந்து குழந்தைகள் அனைவரின் கவனத்தி னையும் ஈர்த்தனர். தொடர்ந்து ஸ்ரீதயா பவுண் டேஷன் பாரத சேவா சார்பாக மாணவ- மாண விகள் மற்றும் ஆசிரியர் பெற்றோர்களுக்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ராஜலட்சுமி சுரேஷ்குமார் தலைமையில் அறுசுவை உணவு வழங்கப் பட்டது.

    இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், ராஜமனுவேல், குமாரசாமி, செல்வம், விருதுநகர் பாரத சேவா மண்டல பொறுப்பாளர் சிவகாசி ரஜினிமுருகன், மாவட்ட நிர்வாகிகள் மாலதி, அய்யப்பன், சண்முகராஜ், நகர நிர்வாகி கள் முத்துமாரியம்மன், கதிரேசன், கார்த்திகேயன், செல்வம், கணேசன், சுரேஷ், பாலமுரளி கிருஷ்ணா, மாரிமுத்து, பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த கழுகுமலை ஜெயக் கொடி, ஜோதிகாமாட்சி, இந்துராஜ், வைரம், பிரியா, மாரியப்பன், முனியசாமி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் வருவதற்கு சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது.
    • இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்குட்பட்ட பழனியாண்டவர் நகர் நகரில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது.

    மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதற்கும் பள்ளி வருவதற்கு தயங்காமல் இருப்பதற்கும் சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது. மாணவர்களே தங்கள் முயற்சியால் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் இந்த சுவர் ஓவியங்களை வரைந்து உள்ளனர். இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஓவியம் வரைவதால் மாணவர்கள் மனநிலையும் ஒருநிலைப்படும். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் இரா. சண்முகப்பிரியா தெரிவித்தார்.

    மேலும் பெற்றோர்கள் ,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • இத்திட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கையேடுகள், அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரண்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • 1ம் வகுப்பு அரும்பு கற்றல் நிலையிலும், 2ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு கற்றல் நிலையிலும், 3ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு, மலர் கற்றல் நிலையிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் நிலையினை கண்டறிவதற்காக செயல் திட்டங்கள், வளறறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் பள்ளி அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

    எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்கள், 3 வட்டார வளமைய பயிற்று–நர்கள், 6 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியும், 298 இடைநிலை ஆசிரிய–ர்களுக்கு மாவட்ட அளவி–லான கருத்தாளர்கள் பயிற்சியும், 1,965 இடைநிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்திட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கையேடுகள், அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் கையேடு, மாணவர்களுக்கான அரும்பு, மொட்டு, மலர் குறித்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு குறித்த 1,55,410 புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    1ஆம் வகுப்பு அரும்பு கற்றல் நிலையிலும், 2ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு கற்றல் நிலையிலும், 3ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு, மலர் கற்றல் நிலையிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் நிலையினை கண்டறிவதற்காக செயல் திட்டங்கள், வளறறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் பள்ளி அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் மாணவ, மாணவியர்களின் கற்றல் கற்பித்தல் திறன்கள் ஆரம்ப நிலையிலேயே சிறப்பான நிலையில் அமைந்து, அவர்களின் எதிர்கால கனவுகள் மெய்படும் வகையில் செயல்திட்டங்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×