என் மலர்
நீங்கள் தேடியது "AnnualDay Function"
- நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் அசத்தினர்.
- மாணவ- மாணவிகள், பெற்றோர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள நக ராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கருணாநிதி, துணை தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டி, கல்வி மற்றும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினர்.
இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் அசத்தினர். காந்தி, நேரு, வ.உ.சி. என தலைவர்கள் வேடமணிந்து குழந்தைகள் அனைவரின் கவனத்தி னையும் ஈர்த்தனர். தொடர்ந்து ஸ்ரீதயா பவுண் டேஷன் பாரத சேவா சார்பாக மாணவ- மாண விகள் மற்றும் ஆசிரியர் பெற்றோர்களுக்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ராஜலட்சுமி சுரேஷ்குமார் தலைமையில் அறுசுவை உணவு வழங்கப் பட்டது.
இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், ராஜமனுவேல், குமாரசாமி, செல்வம், விருதுநகர் பாரத சேவா மண்டல பொறுப்பாளர் சிவகாசி ரஜினிமுருகன், மாவட்ட நிர்வாகிகள் மாலதி, அய்யப்பன், சண்முகராஜ், நகர நிர்வாகி கள் முத்துமாரியம்மன், கதிரேசன், கார்த்திகேயன், செல்வம், கணேசன், சுரேஷ், பாலமுரளி கிருஷ்ணா, மாரிமுத்து, பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த கழுகுமலை ஜெயக் கொடி, ஜோதிகாமாட்சி, இந்துராஜ், வைரம், பிரியா, மாரியப்பன், முனியசாமி உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






