search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wall painting"

    • இளையான்குடி பேரூராட்சியில் விழிப்புணர்வு சுவர் ஓவியம் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
    • பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் அமைந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இளையான்குடி பேரூராட்சி உள்ளது. தற்போது பேரூராட்சி அலுவலகம் அருகே குழந்தைகளுக்காக சுற்றுச்சூழல் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அருகில் கிழக்கு பகுதிகளில் உள்ள பெரிய ஊரணி சீரமைக்கப்பட்டு தற்போது பெய்தமழையால் நிரம்பி ரம்மியமாக காணப்படுகிறது.

    இவற்றை பாதுகாக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று மழைநீரின் அவசியம் பற்றியும், முழுசுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டியும், பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவர் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.

    இதற்கான முயற்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முழுசுகாதாரத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களுடன் செய்து வரும் பிரசாரம் பொதுமக்களிடேயே பாராட்டை பெற்று இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

    • ருதரப்பா நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி உள்ளது.
    • பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

    உடுமலை, ஆகஸ்ட்.2

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருதரப்பா நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் உள்ளது. மாணவ மாணவியர் இருபாலரும் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுவர்களில் சுற்றுச்சூழலை காப்போம் மரம் வளர்ப்போம். நீரை பாதுகாப்பது அவசியம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியம் வரைவதால் மாணவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படும். எனவே மாணவர்களுக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் வருவதற்கு சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது.
    • இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்குட்பட்ட பழனியாண்டவர் நகர் நகரில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது.

    மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதற்கும் பள்ளி வருவதற்கு தயங்காமல் இருப்பதற்கும் சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது. மாணவர்களே தங்கள் முயற்சியால் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் இந்த சுவர் ஓவியங்களை வரைந்து உள்ளனர். இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஓவியம் வரைவதால் மாணவர்கள் மனநிலையும் ஒருநிலைப்படும். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் இரா. சண்முகப்பிரியா தெரிவித்தார்.

    மேலும் பெற்றோர்கள் ,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ×