search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JK"

    காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட கிரால்ஹார் பகுதி வழியாக ஒரு கார் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வருவதை கண்ட பாதுகாப்பு படையினர் அந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.



    சற்றும் எதிர்பாராத வகையில் காரில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டவாறு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் காரினுள் இருந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
    தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு இணையாக கைவசம் பல்வேறு படங்களை வைத்திருக்கும் வரலட்சுமி அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக கமல் தனது படத் தலைப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார். #RaajaPaarvai #Varalakshmi
    விஜய்யின் ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, `மாரி 2' விமலின் கன்னி ராசி, ஜெய்யின் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன. 

    கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு சவாலான வேடங்களில் நடிக்கும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிகின்றன. வரலட்சுமி அடுத்து ஜே.கே. இயக்கத்தில் பார்வை திறனற்றவராக ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் வரலட்சுமி தான் கதையின் நாயகி. இந்த படத்துக்கு முதலில் ராஜபார்வை என்று தலைப்பு வைக்க விரும்பினார்கள். 



    ஆனால் கமலின் அனுமதிக்காக காத்திருந்ததால் தலைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இந்த தலைப்புக்கு கமல் சம்மதமும் அனுமதியும் அளித்துவிட்டார். படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்க இருக்கிறது. #RaajaPaarvai #Varalakshmi #KamalHaasan

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Accident
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் துவங்கப்பட்டன.

    இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் சுமார் 30 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Accident
    ஜே.கே. இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #VaralakshmiSarathkumar
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் மிஸ்டர். சந்திரமௌலி படம் வருகிற வெள்ளியன்று ரிலீசாக இருக்கிறது.

    வரலட்சுமி நடிப்பில் அடுத்ததாக சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், கன்னிராசி, வெல்வட் நகரம், சர்கார், மாரி 2, நீயா 2, பாம்பன், சக்தி என படங்கள் வரிசைக்கட்டி வருகின்றன. 



    இந்த நிலையில், வரலட்சுமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி வரலட்சுமி அடுத்ததாக ஜே.கே. என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. சாய் சமரத் மூவிஸ் சார்பில் ஜெயப்பிரகாசா, பவித்ரா கே.ஜெயராம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மேத்யூ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். #VaralakshmiSarathkumar

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க அனுமதித்தது பா.ஜ.க.தான் என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். #Omar #JKMilitancy
    ஸ்ரீநகர்:

    மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றிருப்பதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியிருந்தார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டு ஒப்பீடு செய்தார். இதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் கதை என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக்கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    “ஜம்மு காஷ்மீரில் அதிக அளவிலான பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொல்ல வேண்டிய அளவிற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறையை மீண்டும் தலைதூக்க அவர்கள் அரசாங்கம் எப்படி அனுமதித்தது? என்கிற கதையைத்தான் உண்மையில் மந்திரி சொல்லியிருக்கிறார். நீங்கள் தெரிவித்த புள்ளி விவரங்களால் நீங்கள் வருத்தப்பட வேண்டுமே தவிர, சாதனையாக கருதக்கூடாது” என உமர் கூறியுள்ளார். #Omar #JKMilitancy
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததையடுத்து, கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். #JKGovernorRule #KashmirGovernorRule
    ஜம்மு:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பகிரங்கமாக வெடித்தது.

    காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக கருதப்படும் இந்த அறிவிப்புக்கு பின்னர் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்துவிட்டது.



    புதிய அரசு அமையும் சூழ்நிலை இல்லாததால்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. #JKGovernorRule #KashmirGovernorRule #BJPDumpsPDP

    ஜம்முவிலுள்ள பந்திபோரா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்திலுள்ள பனார் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    இது குறித்து பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பனார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என கூறினார்.  #JKEncounter
    ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். #militantsgunneddown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலும், பாகிஸ்தான் படையினரின் தாக்குதலும் அத்துமீறி நடந்துகொண்டு இருக்கிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள கெரன் எல்லைப்பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் ஊடுருவலை தடுக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிசூடு நடைபெற்றது.

    இந்த துப்பாக்கிசூட்டில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் 6 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், எத்தனை பேர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் என்பது குறித்தும், அங்கிருந்து தப்பி சென்ற பயங்கரவாதிகள் குறித்தும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #militantsgunneddown
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தரையில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. #IAFchoppercrashlands
    ஜம்மு:

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான சீட்டா ரக ஹெலிகாப்டர் ஜம்முவில் இருந்து புறப்பட்டு வழக்கம்போல் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.

    காலை சுமார் 9.50 மணியளவில் நத்தா டாப் பகுதியில் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விழுந்தது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் அனைவரும் காயங்களின்றி தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IAFchoppercrashlands 
    ஜோசிலா சுரங்கப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அங்குள்ள பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி வருவதாக பிரிவினைவாத அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் தலைமையில் ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக் பகுதியை நோக்கி இன்று 11 மணிக்கு பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    ஆனால் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அந்த பேரணியை நிறுத்துவது மற்றும் இதர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிவினைவாத தலைவர்களான மிர்வாய்ஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் அவரவர் வீடுகளிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மிர்வாய்ஸ் உமர் பாரூக், ‘ஜனநாயகம் மீதான நம்பிக்கையை ஆளும் அரசு மீண்டும் தர மறுத்துள்ளது. நாங்கள் அமைதியான முறையில் பேரணியை நடத்துவோம்’ என பதிவிட்டிருந்தார்.

    மோடியின் வருகைக்காக அப்பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஷேர் இ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்க மையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை பிரதமர் அங்கிருந்து கிளம்பும் வரை நீட்டிக்கப்படும் எனவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. #separatist #ModiVisitJK #housearrest
    ×