search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீநகர்"

    • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு சென்றார்.
    • பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க. அரசால் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த மாதம் 20-ம் தேதி ஜம்முவுக்கு சென்று ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று காஷ்மீருக்கு சென்றார். பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    ஸ்ரீநகர் பாக்சி மைதானத்தில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம்-வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் உள்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புத்துணர்ச்சி, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டின் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோவில்கள், சாமுண்டீஸ்வரி திருக்கோவில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    உங்கள் நாட்டை பாருங்கள், மக்கள் தேர்வு 2024 மற்றும் இந்தியாவுக்கு செல்லுங்கள் எனும் உலக அளவிலான பிரசாரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

    ஜம்மு காஷ்மீரில் அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 பேருக்கு பணி நியமண ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

    • MiG-21 விமானப்படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது
    • தற்போது அதற்குப் பதிலாக MiG-29 போர் விமானப்படை

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், இந்தியா MiG-29 போர் விமானப்படையை நிலைநிறுத்தியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இதற்குமுன் MiG-21 விமானப்படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட MiG-29 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    ''காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதி ஸ்ரீநகர். தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயர்வான பகுதியில் உள்ளது. எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் அதிக எடை மற்றும் உந்துதல் விகிதம், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்றவைக்கு மூலோபாய ரீதியாக சிறந்தது. MiG-29 விமானப்படை இவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் என படைப்பிரிவு தலைவர் விபுல் சர்மா தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு பாலகோட்டில் பாகிஸ்தானின் F-16 விமானத்தை தாக்கியழித்த MiG-21s விமானத்தைவிட MiG-29 பல நன்மைகள் ஊள்ளது. வானில் நிண்ட தூரம் சென்று தாக்குதல், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்குதல் வல்லமை கொண்டது.

    சண்டையின்போது எதிர் விமானங்களின் செயல்பாட்டை செயலழிக்க வைக்கும் தன்மை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2020 கல்வான் தாக்குதலுக்குப் பிறகு லடாக் பகுதியில் MiG-29s விமானப்படை நிலைநிறுத்தப்பட்டது.

    • சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகிறது.

    ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தலைப்புகளில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பின் அங்கமாக கடற்படை கமாண்டோக்கள், தேசிய பாதுகாப்பு படையினர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுற்றுலா மாநாடு ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இந்த பகுதியை மார்கோஸ் என்று அழைக்கப்படும் கடற்படையினர் தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளனர். நாடு முழுக்க இதுபோன்று 118 கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. சுற்றுலா தலைப்பில் மூன்றாவது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற இருக்கிறது.

    ஏற்கனவே இதை தலைப்பில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஸ்ரீநகரில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த 60 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆண்டு பாஜக கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பின் திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் நடைபெறும் முதல் சர்வதேச நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×