search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "G20 meet"

  • குடிமக்கள் டிஜிட்டல் தளங்களில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவை செயல்பட வேண்டும்.
  • டிஜிட்டல் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் சட்டங்களிலும் ஒரு சில சீரான தன்மையை கொண்டு வர வேண்டும்.

  "என்.எஃப்.டி (NFTs), செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் மெட்டாவெர்ஸ் (Metaverse) காலத்தில் குற்றங்களும், பாதுகாப்பும்" என்ற தலைப்பில் நடைபெற்ற G20 மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

  மனிதர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளை நெருக்கமாக கொண்டு வருவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், குடிமக்களுக்கும் அரசாங்கங்களுக்கும், பொருளாதார மற்றும் சமூக தீங்கை விளைவிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சில சமூக விரோத சக்திகளும் உலகளாவிய சக்திகளும் வளர்ந்து வருகின்றன. குடிமக்கள் டிஜிட்டல் தளங்களில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவை செயல்பட வேண்டும்.

  நமது பாதுகாப்பு சவால்கள், 'டைனமைட்' போன்ற வெடிகளில் இருந்து 'மெட்டாவெர்ஸ்' காலத்திற்கும், 'ஹவாலா'விலிருந்து 'கிரிப்டோகரன்சி' காலத்திற்கும் மாறியிருப்பது உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

  இந்த சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் சேர்ந்து ஒரு உத்தியை வகுக்க வேண்டும். இணையதளங்களின் அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட வேண்டும். இந்த விஷயங்களில் எந்த தேசமும் தனியாக போராட முடியாது.

  உலகின் பல நாடுகள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. மேலும், இந்த அச்சுறுத்தல் உலகின் அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் உள்ளது. 2019லிருந்து 2023 வரையில் சைபர் தாக்குதல்களால் உலகிற்கு சுமார் 5.2 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

  தீய நோக்கங்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் கிரிப்டோகரன்சி பயன்படுத்தப்படுவதால் குற்றங்களை கண்டறிதல் மற்றும் தடுப்பு மேலும் சிக்கலாகிறது.

  சைபர் குற்றங்கள் நாட்டின் எல்லைகளால் கட்டுப்படுவதில்லை. இதனை மனதில் கொண்டு, வெவ்வேறு சட்டங்களின் கீழ் நாம் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

  டிஜிட்டல் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் சட்டங்களிலும் ஒரு சில சீரான தன்மையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

  பயங்கரவாதிகள் தங்கள் அடையாளத்தை மறைக்கவும், தீய சிந்தனைகளை இளைஞர்களிடையே பரப்பவும், டார்க்நெட் (Dark Net) போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளுக்கு மெய்நிகர் சொத்துக்கள் (virtual assets) போன்ற புதிய முறைகளை பயன்படுத்துகின்றனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  டிஜிட்டல் தரவுகளின் ஓட்டத்தை (Digital Data Flow) பொருளாதார கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல் குற்றம் மற்றும் பாதுகாப்போடு அதற்குள்ள தொடர்பை புரிந்து கொள்வதற்கும், அதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும் இந்திய உள்துறை அமைச்சகம் செய்து வரும் முயற்சிகளை அவரின் இந்த அறிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன.

  டிஜிட்டல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தேவைப்படும் ஒரு பாதுகாப்பான மற்றும் சிறப்பான சர்வதேச கட்டமைப்பை உருவாக்குவதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் என ஒரு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.

  • சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
  • ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகிறது.

  ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு தலைப்புகளில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

  அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பின் அங்கமாக கடற்படை கமாண்டோக்கள், தேசிய பாதுகாப்பு படையினர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  சுற்றுலா மாநாடு ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இந்த பகுதியை மார்கோஸ் என்று அழைக்கப்படும் கடற்படையினர் தங்களது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளனர். நாடு முழுக்க இதுபோன்று 118 கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. சுற்றுலா தலைப்பில் மூன்றாவது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற இருக்கிறது.

  ஏற்கனவே இதை தலைப்பில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஸ்ரீநகரில் நடைபெறும் மூன்றாவது கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளை சேர்ந்த 60 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட சமயத்தில் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆண்டு பாஜக கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பின் திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் நடைபெறும் முதல் சர்வதேச நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
  • பல வளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கும் போது கடன்களில் சிக்கி தவிக்கின்றன.

  இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற்று  வருகிறது.

  கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதில், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு கூட்டு அறிக்கைக்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளது.

  இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றினார்.

  அப்போது அவர் பேசியதாவது:-

  உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் போர்கள் என பல நெருக்கடியான அனுபவத்தை கடந்தோம். இது உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

  பல வருட முன்னேற்றத்திற்குப் பிறகு, நீடித்த வளர்ச்சியின் இலக்குகளைத் திரும்பப் பெறுவதில் நாம் பின்னோக்கி செல்லும் ஆபத்தில் இருக்கிறோம்.

  பல வளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கும் போது கடன்களில் சிக்கி தவிக்கின்றன. பணக்கார நாடுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதலால் அந்த நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதனால்தான் இந்தியா தலைமை வகிக்கும் ஜி 20 உலகளாவிய தெற்கின் குரலாக ஒலிக்க முயல்கிறது.

  உலகம் தீவிரமாக பிரிந்திருக்கும் இந்நேரத்தில் நாங்கள் இங்கு சந்திக்கிறோம். இந்த கூட்டத்தில்பங்கேற்காத நாடுகளுக்காகவும் நாம் பொறுப்பு ஏற்க வேண்டும். முடிந்த வரையில் நம்மால் ஒன்றிணைந்து தீர்க்க முடியாது சிக்கல்களை நாங்கள் அனுமதிக்கக்கூடாது.

  அதன் முடிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்காமல் எந்தவொரு குழுவும் உலகளாவிய தலைமையை கோர முடியாது. நம்மை ஒன்றிணைக்கும் விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எது நம்மைப் பிரிக்கிறது என்பதில் அல்ல.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
  • மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 கூட்டமைப்பின் நிதிசார் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

  மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

  இந்நிலையில், வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று அவர் கூறினார்.

  முதல்வர் மம்தா பானர்ஜி தனது உரையின்போது கூறியதாவது:-

  மாநில அரசு 12 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது. வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது

  மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். எங்கள் வளர்ச்சி முயற்சிகளின் பலன்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக 'உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்' (துவாரே சர்க்கார்) திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

  இத்திட்டம் தேசிய விருதை வென்றது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ×