என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது: ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை
- உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
- பல வளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கும் போது கடன்களில் சிக்கி தவிக்கின்றன.
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதில், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு கூட்டு அறிக்கைக்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் போர்கள் என பல நெருக்கடியான அனுபவத்தை கடந்தோம். இது உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
பல வருட முன்னேற்றத்திற்குப் பிறகு, நீடித்த வளர்ச்சியின் இலக்குகளைத் திரும்பப் பெறுவதில் நாம் பின்னோக்கி செல்லும் ஆபத்தில் இருக்கிறோம்.
பல வளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கும் போது கடன்களில் சிக்கி தவிக்கின்றன. பணக்கார நாடுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதலால் அந்த நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதனால்தான் இந்தியா தலைமை வகிக்கும் ஜி 20 உலகளாவிய தெற்கின் குரலாக ஒலிக்க முயல்கிறது.
உலகம் தீவிரமாக பிரிந்திருக்கும் இந்நேரத்தில் நாங்கள் இங்கு சந்திக்கிறோம். இந்த கூட்டத்தில்பங்கேற்காத நாடுகளுக்காகவும் நாம் பொறுப்பு ஏற்க வேண்டும். முடிந்த வரையில் நம்மால் ஒன்றிணைந்து தீர்க்க முடியாது சிக்கல்களை நாங்கள் அனுமதிக்கக்கூடாது.
அதன் முடிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்காமல் எந்தவொரு குழுவும் உலகளாவிய தலைமையை கோர முடியாது. நம்மை ஒன்றிணைக்கும் விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எது நம்மைப் பிரிக்கிறது என்பதில் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்