search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hunger strike"

    • சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்றது தான் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை கலங்க வைத்துள்ளது.
    • நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்ைத சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ். ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்ப ட்ட சம்பவம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்றது தான் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை கலங்க வைத்துள்ளது.

    இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணமாகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    உண்ணாவிரத போராட்டம்

    நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்ைத சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.

    இதைத்தொ டர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது. ஆனால் அதுவும் சரியாக நடைபெறாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது மட்டும் நடவடிக்கை எடுத்து நீதி சாய்க்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்த கூடாது என்றும் டெல்லியில் இருந்து சிறப்பு குழு வந்துதான் விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது எந்த நடவடக்கையும் எடு க்க கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

    தினேஷ் குண்டுராவ்

    இது தொடர்பாக மேல்மட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துேவாம் என்று கூறி வந்ேதாம். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட்ட தற்காலிக நீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

    போராட்டம் வாபஸ்

    இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்த காங்கிரஸ் தமிழக மேலிட பொறு ப்பாளர் தினேஷ் குண்டுராவ் வேண்டுகோளுக்கு இணங்க காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 30-ந் தேதி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர்.
    • பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தற்போது தனியார் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பதவி இறக்கம் உள்ளிட்ட5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பூமா கோவில் அருகே 75 பெண்கள் உள்பட 300 தனியார் அலுவலர்கள் 1 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி போலீசார் உத்தரவின் பேரில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது. 

    • சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்து தர வேண்டும்.
    • இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    கோவை

    கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில், இன்று வாடகை வாகனங்கள் டிரைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் வாகன பர்மிட்டை பதிவிறக்கம் செய்வதை அரசு எளிமைப்படுத்த வேண்டும்.

    வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவு கட்டணங்களையும் 177 சதவீதம் உயர்த்துவதை தமிழக அரசு பரிசிலிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைத்து அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசை தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.

    மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு வழிவகை செய்து தர வேண்டும். சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்து தர வேண்டும்.

    வாகனங்களை தடுத்து நிறுத்தி டிரைவர்களுக்கு அபராதம் என்ற பெயரில் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் வசூலிப்பதை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
    • தடயை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். காவல்துறை தடையை மீறி உண்ணாவிரதமிருக்க பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் முனுசாமி, செங்கோட்டையின், அரக்கோணம் ரவி, உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்.

    சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.

    சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளனர்.

    அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்டல்ஸ் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்று குவாரியை இயக்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனால் சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிபந்தனைகளுக்கு முரணாக, சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி விவசாயி செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.

    அவரின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது உறவினர்கள் 10 பெண்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  

    • பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 ரூபாய் வழங்க வேண்டும்
    • தேயிலை தூளுக்கு 150 ரூபாய்க்கு குறையாமல் ஏலம் எடுக்க வேண்டும்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 30 வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கண்டித்து குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சமீப காலத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாத நிலையில் மலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு இதுவரை எந்த தீர்வும் காணப்படாத நிலையில் இன்று உண்ணாவிரத. போராட்டம் நடைபெற்றது.

    அப்போது பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 ரூபாய் வழங்க வேண்டும். தேயிலை ஏல மையத்தில் செயற்கை வணிகத்தை மத்திய அரசு விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேயிலை ஏல மையங்களில் குறைந்தபட்சம் தேயிலை தூளுக்கு 150 ரூபாய்க்கு குறையாமல் ஏலம் எடுக்க வேண்டும்.

    கலப்பட‌ தேயிலை தூளினால் தேயிலை விவசாயம் பாதிக்கப்படுகிறது மற்றும் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும் உட்பட‌ பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும்‌உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    • தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று நிர்வாக கட்டடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • போராட்டத்துக்கு சங்க தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ மனை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று நிர்வாக கட்டடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு சங்க தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார். போராட்டத்தில் பொதுச்செயலாளர் செல்வதுரை, பொருளாளர் டேனியல்சாமி, துணைத் தலைவர் குமார், துணை செயலர் கண்ணன், இணைசெயலர் மனோகரன் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சமவேலைக்கு சம ஊதியம், அடையாள அட்டை வழங்க வேண்டும், பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

    • விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவனம் அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக கூறி கடந்த 7 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் மாசுக்கட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் வனஜா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் அதன் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் புதியதாக உரிமம் வழங்கப்பட்டு மண் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டு வரும் தனியார் கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் கூறுகையில் ,அரசின் விதிமுறைகளை பின்பற்றி தான் கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு. தற்போது குழி எடுத்து மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ஏரி அமைக்கப்பட்டு அதில் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

    தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.பாறை எடுக்க 6 மாத காலங்கள் ஆகும். இந்தநிலையில், தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பகத்தின் கரையோரம் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்தது.
    • உண்ணாவிரத போராட்டத்தையொட்டி அங்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    ஊட்டி

    நாடு முழுவதும் உள்ள வன உயிரின காப்பகத்தின் கரையோரம் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து நிரந்தர கட்டிடங்கள் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மாநில அரசுகள் 3 மாதத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கும் படி தெரிவித்தது.

    இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள மசினகுடி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வியாபாரிகள் தங்களது கடைகளில் கருப்புக் கொடிகளை கட்டி போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கூடலூர் காந்தி மைதானத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இதில் திரளானவனர்கள் பங்கேற்றனர்.இதேபோல் இப்பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு தங்களது உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    உண்ணாவிரத போராட்டத்தையொட்டி அங்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள் கூறுகையில்,சூழல் உணர் திறன் மண்டலத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட்டுள்ளது.

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான ஜெயலலிதா அரசு கனிவுடன் ஆய்வு செய்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து, அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகளுக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் சிப்காட்டுக்கும், தினந்தோறும் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.

    ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை தற்பொழுது கைவிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய விவசாயிகள் நிறைந்த மாவட்டங்களாகும். ஏற்கெனவே, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா பல்கலைக்கழத்தை மூடியதன் மூலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை திமுக அரசு பறித்தது.

    இப்பொழுது, இந்த செயல்படாத, நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறித்துள்ளது. ஜெயலலிதா அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்றும்; இதற்குத் தேவையான நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில், கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், எம்.பி தலைமையில் நாளை ( சனிக் கிழமை ) காலை திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

    மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு ஊழியர்களுக்கு கண்டனம்
    • 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துகடையில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உதாசீனப்படுத்தும் மாவட்ட ஊராட்சி குழு, அரசு ஊழியர்கள், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை கண்டித்து மகாத்மா காந்தி வழியில் உண்ணாவிரத போராட்டம் இன்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பா ளர்சசிகுமார் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்எல்ஏ வாலாஜா அசேன், மாவட்ட கவுன்சிலர் பவித்ரா சசிகுமார், மேற்கு ஒன்றிய தலைவர் ஜானகிராமன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் நியாஸ், நிர்வாகிகள் பிரசணகுமார், மோகன், வசிகரன், உத்தமன், நரேஷ், காந்தி உள்பட 70க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏமாற்றி வருவதாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.
    • தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம்:

    தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாநில துணைத் தலைவர் வி‌.பி.துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் மாநில நெசவாளர் பிரிவு தலைவர் கே.எஸ்.பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சேதுராமன், வடிவேல், நாகராஜன், சத்தியபானு, விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் ஆர்.டி.இளங்கோ, மாவட்ட பொருளாளர் தங்கபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஹரிஹரன், கதிரேசன், சித்ரா, நகர தலைவர் வேல்முருகன், மத்திய அரசு திட்டப்பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் தி.மு.க.வினர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏமாற்றி வருவதாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.

    ×