search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரி உரிமம்"

    • கோகலை கிராமத்தில் கல்குவாரி உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • மேலும், கல்குவாரிகளுக்கான தேவை மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குவாரிகள் நடத்த வலியுறுத்தியும் பேசினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அக்கலாம்பட்டி கோகலை கிராமத்தில் கல்குவாரி உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் திருச்செங்கோடு வட்டம் அக்கலாம்பட்டி கோக்கலை கிராமத்தில் கல்குவாரி உரிமம் வழங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், கல்குவாரிகளுக்கான தேவை மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குவாரிகள் நடத்த வலியுறுத்தியும் பேசினர்.

    இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்டல்ஸ் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்று குவாரியை இயக்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனால் சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிபந்தனைகளுக்கு முரணாக, சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி விவசாயி செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.

    அவரின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது உறவினர்கள் 10 பெண்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  

    ×