என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட காட்சி. பெண்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கிய காட்சி.
கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் உண்ணாவிரதம்
- சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்டல்ஸ் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்று குவாரியை இயக்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுற்றுச்சூழல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நிபந்தனைகளுக்கு முரணாக, சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி விவசாயி செந்தில்குமார் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவரது சொந்த நிலத்திலேயே இருந்து வருகிறார்.
அவரின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது உறவினர்கள் 10 பெண்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.