search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கல்குவாரியை கண்டித்து மேலும் ஒரு விவசாயி உண்ணாவிரதம்
    X

    விவசாயி செந்தில்குமார்.

    தனியார் கல்குவாரியை கண்டித்து மேலும் ஒரு விவசாயி உண்ணாவிரதம்

    • விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவனம் அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக கூறி கடந்த 7 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் மாசுக்கட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் வனஜா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் அதன் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் புதியதாக உரிமம் வழங்கப்பட்டு மண் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டு வரும் தனியார் கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் கூறுகையில் ,அரசின் விதிமுறைகளை பின்பற்றி தான் கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு. தற்போது குழி எடுத்து மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ஏரி அமைக்கப்பட்டு அதில் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

    தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.பாறை எடுக்க 6 மாத காலங்கள் ஆகும். இந்தநிலையில், தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×