என் மலர்
புதுச்சேரி

ஜிப்மர் தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட காட்சி.
ஜிப்மர் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
- தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று நிர்வாக கட்டடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- போராட்டத்துக்கு சங்க தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவ மனை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று நிர்வாக கட்டடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சங்க தலைவர் சிவசங்கரன் தலைமை வகித்தார். போராட்டத்தில் பொதுச்செயலாளர் செல்வதுரை, பொருளாளர் டேனியல்சாமி, துணைத் தலைவர் குமார், துணை செயலர் கண்ணன், இணைசெயலர் மனோகரன் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமவேலைக்கு சம ஊதியம், அடையாள அட்டை வழங்க வேண்டும், பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
Next Story






