என் மலர்
உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
- அரசு ஊழியர்களுக்கு கண்டனம்
- 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துகடையில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உதாசீனப்படுத்தும் மாவட்ட ஊராட்சி குழு, அரசு ஊழியர்கள், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை கண்டித்து மகாத்மா காந்தி வழியில் உண்ணாவிரத போராட்டம் இன்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பா ளர்சசிகுமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்எல்ஏ வாலாஜா அசேன், மாவட்ட கவுன்சிலர் பவித்ரா சசிகுமார், மேற்கு ஒன்றிய தலைவர் ஜானகிராமன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் நியாஸ், நிர்வாகிகள் பிரசணகுமார், மோகன், வசிகரன், உத்தமன், நரேஷ், காந்தி உள்பட 70க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story






