search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harassment complaint"

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தலைமை நீதிபதி, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். #CJIRanjanGogoi
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியுள்ளார். கடந்த ஆண்டு தலைமை நீதிபதி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது.



    இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான விடுமுறைக் கால அவசர அமர்வு இன்று கூடியது. அப்போது, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இளநிலை பெண் உதவியாளர் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. 20 ஆண்டு கால சுயநலமில்லா சேவையில், என் மீது கூறப்படும் இந்த புகார்கள் நம்ப முடியாதவை. இதன்மூலம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    அடுத்த வாரம் சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ளதால் என் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். ஆனால், எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி நான் செயல்படுவேன்.

    பொய் புகார் பரப்பும் பெண் ஊழியர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால் இதுபான்ற புகாரை அவர் அளித்துள்ளார். என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன.

    இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

    இதைத் தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நீதிபதிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும், நீதித்துறையின் சுதந்திரத்தை ஊடகங்கள் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். #CJIRanjanGogoi
    நிர்மலாதேவி வழக்கில் அவரிடம் பல்வேறு சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியிருப்பதால் வருகிற 22-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Nirmaladevi #HCMaduraiBench
    மதுரை:

    அருப்புக்கோட்டை பேராசிரியை, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு ஆஜராகி நிர்மலாதேவி வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    மேலும் அவருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்து உள்ளது.

    மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது.

    இந்த நிலையில், நிர்மலா தேவி பற்றிய செய்திகள் தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. ஆகவே அந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார்.

    அதை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் வருகிற 22-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். #Nirmaladevi #HCMaduraiBench
    பாலியல் புகாரில் சிக்கிய பெரியகுளம் சட்டசபை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமுவுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. #KathirKamu #MaduraiHCBench
    மதுரை:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. பெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ம் ஆண்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி, கடந்த 8-ந்தேதி தேனி அனைத்து மகளிர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன். எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.



    மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளராக உள்ளார். அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அந்த சமயத்தில் அவரை போலீசார் திடீரென கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    அதற்கு அரசு வக்கீல், இன்று (வெள்ளிக்கிழமை) வரை மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார். இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரரை தேர்தல் முடியும் வரை கைது செய்யக்கூடாது. தேர்தல் முடிந்த பின்பு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம். சம்பந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார். #KathirKamu #MaduraiHCBench
    அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மீது முன்னாள் பெண் எம்.பி. பாலியல் புகார் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் (76). இவர் ஒபாமா அரசில் பதவி வகித்தார். அடுத்த ஆண்டு (2020) நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இவர் மீது முன்னாள் பெண் எம்.பி. ஒருவர் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளார். அவரது பெயர் லுசி புளோரஸ் (39). இவர் 2014-ம் ஆண்டு நிவேடாவின் துணை கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டவர்.

    ஒரு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தான் பேச தயாராக இருந்த போது தனது பின்னால் நின்று கொண்டிருந்த ஜோ பிடன் தோளில் கை வைத்து பின் தலையில் முத்தமிட்டார் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன். குழப்பமான நான் ஜோ பிடனை விட்டு தனியாக சென்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார். இதை ஜோபிடனின் செய்தி தொடர்பாளர் பில் ரூஸ்டோ மறுத்துள்ளார்.

    இது குறித்து டெலா வரில் நடந்த ஜனநாயக கட்சியின் விருந்து கூட்டத்தில் ஜோபிடன் விளக்கம் அளித்தார். தனது செயல்பாடுகள் இத்தகைய கேள்விகளை எழுப்பியுள்ளது.

    நான் தொட்டு பேசக்கூடிய அரசியல்வாதி. அதுவே எனக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.
    சென்னை வில்லிவாக்கத்தில் பள்ளி மாணவி பாலியல் புகார் அளித்ததின் பேரில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் முத்து தெருவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மாலதி (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியை சேர்ந்த ரூபன் (20) என்ற கல்லூரி மாணவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மாணவியின் தாயாருக்கு தெரிந்தவுடன் அவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தனது மகளை ஆசை வார்த்தை கூறி ரூபன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறி இருந்தார்.

    அதன் அடிப்படையில் உதவி கமி‌ஷனர் முத்து மாணிக்கம் விசாரணை நடத்தினார். அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி மைனராவார். ஆதலால் கல்லூரி மாணவர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட மாணவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    மாணவியின் தாயார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மாணவி விசாரணையின் போது தெரிவித்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    நெல்லை கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    திருப்பூரை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகள் சரண்யா (வயது27). இவருக்கும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அபிநயா(8), கிருஷ்ணா(2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி கோர்ட்டில் சரண்யா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து தனது குழந்தைகளுடன் சரண்யா செங்கோட்டையில் தனியாக வசித்து வருகிறார்.

    சரண்யாவுக்கு தீக்காயத்தால் உடல் ஊனம் ஏற்பட்டது. இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்கவேண்டும் என நெல்லை கலெக்டரிடம் அவர் முறையிட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் தட்டச்சராக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் சரண்யா மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் ஆகியோரிடம் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது உயர் அதிகாரி ஒருவர் அடிக்கடி என்னிடம் இரட்டை அர்த்த வசனத்தில் பேசி வந்தார். விடுமுறை நாட்களிலும் என்னை பணிக்கு வரச்சொல்லி எனது அருகே அமர்ந்து எனக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்து வந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தில் இருந்து வெளியேறி மாவட்ட உயர் அதிகாரியிடம் புகார் கூறினேன். பின்னர் மன உளைச்சல் காரணமாக 2நாள் விடுமுறை எடுத்து விட்டு பணிக்கு வந்தேன். அப்போது எனக்கு பதில் மற்றொருவர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

    விபரம் கேட்டதற்கு எனக்கு பணி இல்லை என மறுத்து விட்டனர். என்னிடம் ‘செக்ஸ் சில்மி‌ஷம்’ செய்த உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    அப்போது அவருடன் நெல்லை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க தலைவர் கற்பகம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
    குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ளதாக நடிகை கஸ்தூரி கூறினார். #MeToo #Kasthuri
    நெல்லை:

    தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு நடிகை கஸ்தூரி இன்று மதியம் நெல்லை வந்தார். பின்னர் அவர் குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருட்சிக ராசிக்குரிய நதி தாமிரபரணி. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நேற்று வரை இதன் சிறப்புகள் எனக்கு தெரியாமல் இருந்தது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இங்கு வந்த பிறகே அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொண்டேன். என்னுடைய ராசியும் விருட்சிகம் தான். எனவே இங்கு வந்து நீராடினேன்.


    பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதற்கு தீர்வு என்ன என்பதை யோசிக்க வேண்டும். குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் பிரச்சனை உள்ளது.

    இதுதான் மீ டூ இயக்கத்தின் மூலம் வெளிவருகிறது. பெண்களுக்கு விரைவில் சம நீதி கிடைக்கும் என நம்பிக்கையுள்ளது. அதன் முதல்படி தான் இன்றைய நிகழ்வுகள். அரசு சட்டங்கள் உள்ளது. அது சரியான திசையில் சென்றடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Kasthuri
    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோரி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RahulJohri #metoo

    மும்பை:

    பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்த புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    ‘மீ டூ’ என்ற டுவிட்டர் பக்கத்தில் பிரபலங்கள் மீது பெண்கள் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வருகிறார்கள்.

    பிரபல இந்தி நடிகர் நானேபடேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா அளித்த புகாரை அடுத்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது புகார்கள் கூறப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, மலிங்கா ஆகியோர் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியான ராகுல்ஜோரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் மீ டூ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அதில் ராகுல்ஜோரியை வேலைவாய்ப்பு வி‌ஷயமாக சந்தித்தபோது அவர் பாலியல் ரீதியாக பேசி அழைத்தார் என்று தெரிவித்துள்ளார். புகார் கூறிய பெண்ணின் பெயர் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    ராகுல்ஜோரி 2016-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்பு அவர் பிரபல நெட்வொர்க் நிறுவனத்தில் துணைத் தலைவராக வேலை பார்த்து வந்தார். #RahulJohri #metoo

    திருவண்ணாமலையில் பேராசிரியர்கள் மீது மாணவி அளித்த பாலியல் புகார் பொய் என்று கூறி அக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் மாணவி பொய் புகார் அளித்திருப்பதாக கூறி அக்கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர், நேற்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கல்லூரி முன்புள்ள கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து விரைந்து வந்த வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பிச் சென்றனர். #Tamilnews
    ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள செக்ஸ் புகார் குறித்து நாளை போலீஸ் அதிகாரிகள் குழு விசாரிக்க உள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    தமிழக காவல் துறையில் பெண் அதிகாரி ஒருவர் சென்னையில் முக்கிய பிரிவு ஒன்றில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார்.

    அவருக்கு உயர் அதிகாரியாக ஐ.ஜி. அந்தஸ்தில் ஆண் போலீஸ் அதிகாரி இருக்கிறார்.

    ஒரே பிரிவில் இருந்ததால் அந்த ஐ.ஜி. அடிக்கடி பெண் போலீஸ் சூப்பிரண்டை அழைத்து வழக்குகள் தொடர்பாக பேசுவதுண்டு. நாளடைவில் அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு மீது ஐ.ஜி.க்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

    சுமார் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இதற்கு பெண் போலீஸ் சூப்பிரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் ஐ.ஜி. தொடர்ந்து பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் ரீதியிலான முயற்சிகளை கையாண்டதாக தெரிகிறது. பல தடவை பாராட்டுவதாக கூறி அவர் கட்டிப்பிடிக்க முயற்சி செய்தாராம்.

    ஒரு தடவை ஒரு வழக்கு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பெண் சூப்பிரண்டை அவர் தனது அறைக்கு அழைத்திருந்தாராம். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச படத்தை காட்டினாராம்.

    ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு அடிபணியாததால் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஐ.ஜி. இறங்கியதாக தெரிகிறது. அதாவது அந்த பெண் சூப்பிரண்டிடம் “உன்னைப் பற்றிய ஆண்டு ரகசிய அறிக்கை (ஏ.சி.ஆர்.)யில் உனக்கு எதிராக குறிப்புகளை எழுதுவேன்” என்று ஐ.ஜி. அச்சுறுத்தும் வகையில் மிரட்டினாராம்.

    இதனால் என்ன செய்வது என்று தவித்த அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு வேறு பிரிவுக்கு மாற்றலாகி சென்று விடலாம் என்று முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு உடனடி இடமாற்றம் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அந்த ஐ.ஜி. ஒருநாள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் முயற்சியில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இனியும் பொறுமையாக இருக்க கூடாது என்று முடிவு செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு சமீபத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டார்.

    அப்போது தனக்கு ஐ.ஜி. எந்தெந்த வகையில் செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என்று டி.ஜி.பி.யிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு விளக்கமாக எடுத்துக் கூறினார்.

    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஆதாரத்துடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கண்டு டி.ஜி.பி. அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான அந்த விசாகா கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த கமிட்டி ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக காவல்துறையின் விசாக கமிட்டி நாளை (வியாழக்கிழமை) கூட உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பகம் கட்டிடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூடுதல் டி.ஜி.பி.சீமா அகர்வால் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கூட்டத்தில் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த செக்ஸ் புகார் குறித்து விசாரணை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் பூர்வாங்க விசாரணைகள் நடந்து முடிந்து விட்டன. எனவே நாளைய தினம் விசாரணையின் அடுத்தக் கட்டம் தொடங்கப்பட உள்ளது.

    செக்ஸ் புகார் செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரணை நடத்த உள்ளனர் . அவரிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்பிறகு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் ஐ.ஜி.யிடமும் விசாரணை நடத்தப்படும். அவர்கள் சொல்லும் தகவலின் அடிப்படையில் விசாகா கமிட்டி இறுதி முடிவு எடுக்கும்.

    இந்த தகவல்களை விசாரணை கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்தார். விசாகா கமிட்டி யாருக்கும் சாதக பாதகம் இன்றி நியாயமான முடிவை எடுக்கும் என்றும் அந்த உறுப்பினர் கூறினார். எனவே செக்ஸ் புகாருக்கு ஆளாகி இருக்கும் ஐ.ஜி. மீது துறை ரீதியிலான நடவடிக்கை பாயுமா? என்ற பரபரப்பு தமிழக காவல்துறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

    விசாக கமிட்டி விசாரணை நாளை தொடங்குவதையொட்டி பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த செக்ஸ் புகாரில் உடனடி நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு சென்னையிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் செக்ஸ் புகார் சுமத்தப்பட்ட ஐ.ஜி. இடமாற்றம் செய்யப்படவில்லை. அவர் அதே பிரிவில் உள்ளார். #Vishakacommittee
    போலீஸ் ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த அதிகாரிகள் இருவரும் ஒரே துறையில் பணியாற்றினர். அப்போது ஐ.ஜி. அந்தஸ்தில் இருந்த அதிகாரி பெண் போலீஸ் சூப்பிரண்டின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் செக்ஸ் புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சென்னையிலேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் 16 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுடன் பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Vishakacommittee
    கோவையில் திருமணம் செய்வதாக ஏமாற்றி கைதான நடிகை சுருதி போலீசார் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
    கோவை:

    திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், கோடீஸ்வர இளைஞர்களை ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த துணை நடிகை சுருதி.

    அவரது தாயார் சித்ரா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நடிகை சுருதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை. அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள். சைபர்கிரைம் போலீசார் என்னையும், எனது தாயாரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது எங்களை ஏதும் பேசவிடாமல் நாங்கள் சொல்வதை எதையும் கேட்காமல், நாங்கள் சொல்வது போல் அவர்களே எல்லாவற்றையும் எழுதி கொண்டனர்.

    விசாரணையின் போது என்னை நிர்வாணமாக்கி, பெண் போலீசை வைத்து போட்டோ எடுத்து கொண்டனர். அதனை இணைய தளத்தில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று மிரட்டினர். மேலும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால் கொஞ்சம், கொஞ்சமாக இந்த வழக்கில் இருந்து உன்னை விடுவித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் என்னை விசாரிக்க வரும் போலீசாரும் பாலியல் ரீதியாக எனக்கு துன்புறுத்தல்களை கொடுத்து வந்தனர். போலீஸ் விசாரணை முடிந்ததும் நீதிபதியிடம் இது குறித்து நான் புகார் அளித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

    பேட்டியின்போது அவரது தாய் சித்ரா உடன் இருந்தார்.
    ×