search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோரி மீது பாலியல் புகார்
    X

    கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோரி மீது பாலியல் புகார்

    இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோரி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #RahulJohri #metoo

    மும்பை:

    பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்த புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    ‘மீ டூ’ என்ற டுவிட்டர் பக்கத்தில் பிரபலங்கள் மீது பெண்கள் பலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வருகிறார்கள்.

    பிரபல இந்தி நடிகர் நானேபடேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா அளித்த புகாரை அடுத்து பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.

    நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது புகார்கள் கூறப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இலங்கை கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, மலிங்கா ஆகியோர் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியான ராகுல்ஜோரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் மீ டூ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அதில் ராகுல்ஜோரியை வேலைவாய்ப்பு வி‌ஷயமாக சந்தித்தபோது அவர் பாலியல் ரீதியாக பேசி அழைத்தார் என்று தெரிவித்துள்ளார். புகார் கூறிய பெண்ணின் பெயர் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    ராகுல்ஜோரி 2016-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்பு அவர் பிரபல நெட்வொர்க் நிறுவனத்தில் துணைத் தலைவராக வேலை பார்த்து வந்தார். #RahulJohri #metoo

    Next Story
    ×