search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை- அதிகாரி மீது புகார்
    X

    நெல்லை கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை- அதிகாரி மீது புகார்

    நெல்லை கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    திருப்பூரை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகள் சரண்யா (வயது27). இவருக்கும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அபிநயா(8), கிருஷ்ணா(2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி கோர்ட்டில் சரண்யா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து தனது குழந்தைகளுடன் சரண்யா செங்கோட்டையில் தனியாக வசித்து வருகிறார்.

    சரண்யாவுக்கு தீக்காயத்தால் உடல் ஊனம் ஏற்பட்டது. இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்கவேண்டும் என நெல்லை கலெக்டரிடம் அவர் முறையிட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் தட்டச்சராக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் சரண்யா மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் ஆகியோரிடம் இன்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது உயர் அதிகாரி ஒருவர் அடிக்கடி என்னிடம் இரட்டை அர்த்த வசனத்தில் பேசி வந்தார். விடுமுறை நாட்களிலும் என்னை பணிக்கு வரச்சொல்லி எனது அருகே அமர்ந்து எனக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்து வந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்தில் இருந்து வெளியேறி மாவட்ட உயர் அதிகாரியிடம் புகார் கூறினேன். பின்னர் மன உளைச்சல் காரணமாக 2நாள் விடுமுறை எடுத்து விட்டு பணிக்கு வந்தேன். அப்போது எனக்கு பதில் மற்றொருவர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

    விபரம் கேட்டதற்கு எனக்கு பணி இல்லை என மறுத்து விட்டனர். என்னிடம் ‘செக்ஸ் சில்மி‌ஷம்’ செய்த உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    அப்போது அவருடன் நெல்லை மாவட்ட ஜனநாயக மாதர் சங்க தலைவர் கற்பகம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×