என் மலர்
செய்திகள்

வில்லிவாக்கம் பள்ளி மாணவி பாலியல் புகார்- கல்லூரி மாணவர் கைது
சென்னை வில்லிவாக்கத்தில் பள்ளி மாணவி பாலியல் புகார் அளித்ததின் பேரில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் முத்து தெருவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மாலதி (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியை சேர்ந்த ரூபன் (20) என்ற கல்லூரி மாணவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாணவியின் தாயாருக்கு தெரிந்தவுடன் அவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனது மகளை ஆசை வார்த்தை கூறி ரூபன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறி இருந்தார்.
அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் முத்து மாணிக்கம் விசாரணை நடத்தினார். அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி மைனராவார். ஆதலால் கல்லூரி மாணவர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவியின் தாயார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மாணவி விசாரணையின் போது தெரிவித்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story