என் மலர்

  செய்திகள்

  பெரியகுளம் அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன்- மதுரை ஐகோர்ட் உத்தரவு
  X

  பெரியகுளம் அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமுவுக்கு முன்ஜாமீன்- மதுரை ஐகோர்ட் உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலியல் புகாரில் சிக்கிய பெரியகுளம் சட்டசபை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமுவுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. #KathirKamu #MaduraiHCBench
  மதுரை:

  தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. பெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

  இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ம் ஆண்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி, கடந்த 8-ந்தேதி தேனி அனைத்து மகளிர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன். எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளராக உள்ளார். அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அந்த சமயத்தில் அவரை போலீசார் திடீரென கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

  அதற்கு அரசு வக்கீல், இன்று (வெள்ளிக்கிழமை) வரை மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார். இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

  அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரரை தேர்தல் முடியும் வரை கைது செய்யக்கூடாது. தேர்தல் முடிந்த பின்பு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம். சம்பந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார். #KathirKamu #MaduraiHCBench
  Next Story
  ×