search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance meeting"

    • மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவன மேலாளர்கள், கியாஸ் கம்பெனி ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கியாஸ் நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகி யோர்க ளுடன், மாதாந்திர சமயைல் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 4 மணிக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். சமையல் கியாஸ் விநியோகம் தொடர்பான குறை பாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சமையல் கியாஸ் விநியோகம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என அதில் கலெக்டர் கூறியுள்ளார்.

    • பிற்பகல் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தலைமையில் நடைபெற உள்ளது.
    • விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கி ல்வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22- ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தலைமையில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண்விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்ந டை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கி யாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    • 20-ந்தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது

    திருப்பூா்

    திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

    இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமை வகித்து மின்நுகா்வோரிடமிருந்து குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்யவுள்ளாா்.கூட்டத்தில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • அதில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனு மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன், தலைமை நடந்தது.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத்திறனாளி கள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்ப டைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

    முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களையும், 12 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டும னைப்பட்டாக்களை யும் கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர் அனிதா, கலெக்ட ரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனை த்து த்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்ட ரிடம் நேரில் அளித்தனர்.

    நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில்; பட்டா தொடர்பான 93 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 46 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொட ர்பாக 39 மனுக்களும், வேலை வாய்ப்பு தொட ர்பாக 26 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 52 மனு க்களும், மாற்றுத்தி றனாளி நல அலுவலகம் தொடர்பாக 25 மனுக்க ளும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 64 மனுக்களும், இதர மனுக்கள் 285 ஆக மொத்தம் 630 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளு க்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்ப ட்டு விரைந்து நட வடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என கலெக்டர் அலுவல ர்களுக்கு உத்தர விட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வேளாண்துறை வருவாய்த்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அடுத்த 15 தினங்களுக்கு 5000 கன அடி வீதம் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    சம்பா சாகுபடியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    • குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது
    • pghs/rocbe@epfindia/gov/in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம்.

    கோவை,

    கோவை மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சார்பில் கோவை மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி அலுவலக மாநாட்டு மண்டபம், பி.பி.டி.சி எஸ்டேட்ஸ் குழு மற்றும் வால்பாறை அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் குறை தீர்ப்புக்கூட்டம் நடக்க உள்ளது.

    இதேபோல திருப்பூரில் நெட்வொர்க்கிங் ஆடை நிறுவனம், நீலகிரியில் மஞ்சூர் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, குந்தா பிரிட்ஜ் போஸ்ட் ஆகிய பகுதிகளிலும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

    எனவே வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் வருகிற 28-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை மேற்கண்ட முகாம்களுக்கு நேரில் வந்து உரிய வைப்பு நிதி கணக்கு எண் மற்றும் ஓய்வூதிய நியமன ஆணை எண் ஆகியவற்றுடன் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.

    அல்லது pghs/rocbe@epfindia/gov/in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலூரில் நாளை நடக்கிறது
    • கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அழைப்பு

    வேலுார்:

    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (25-ந் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகிக்கிறார்.

    வேளாண், பொறியியல், மின்வாரியம், ஆவின், கூட்டுறவு சங்கங்கள், போக்குவரத்து உட்பட எல்லாதுறை அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

    எனவே, விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உய்யக்கொண்டான், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
    • கரும்புக்கு சிறப்பு ஊக்க ஊதியமாக டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    தஞ்சாவூர்,:

    தஞ்சையில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ( பொ) பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

    அப்போது விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜீவக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த செயல்களால் தமிழகத்திற்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் உள்ளது.

    இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்கு உரிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன.

    இதனால் அடுத்து சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

    இதேபோல் பயிர் காப்பீடு திட்டத்தை தொடங்க வேண்டும். உய்யக்கொண்டான் ,புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மின்சாரம், உர தட்டுப்பாடு இருக்கக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரும்புக்கு சிறப்பு ஊக்க ஊதியமாகடன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

    எனவே வருகிற 25ஆம் தேதி முதல் -அமைச்சர் நாகை மாவட்டத்திற்கு வர உள்ளார்.

    அதற்கு முன்னதாக அரசாணை வெளியிட வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்ய உள்ளதால் தரமான நிலக்கடலை விதைகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பாசனதாரர் விவசாய சங்க தலைவர் தங்கவேல் அளித்துள்ள மனுவில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் கடமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.

    குறுவை சாகுபடி செய்யப்பட்டு அடுத்து சம்பா சாகுபடி செய்ய ஆயத்தமாக உள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் நீர் பாசன பெற்றால் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்.

    சம்பா சாகுபடிக்கு ஏற்றவாறு தண்ணீர் முறை வைக்காமல் நீர் விட வேண்டும்.

    கல்லணை கால்வாய் பிரிவில் மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்ப ட்டால் கடைமடை பகுதிக்கு நீர் வர வாய்ப்பாக இருக்கும்.

    எனவே இதுகு றித்து அதிகாரி கள், விவசா யிகள் குழு அமைத்து நேரடி ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பி டப்ப ட்டுள்ளது.

    • புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
    • 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறை கேட்பு கூட்டம், புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு வருகிற 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்.
    • கலெக்டர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் வரும் 4-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் வரும் 4-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு.

    ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறுகிறது.
    • திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகளை கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் வல்லம் சாலையில் நாளை 3-ந்தேதி (வியாழக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மாலை 1 மணி வரை நடை பெற உள்ளது.

    எனவே வல்லம், மின் நகர், செங்கிப்பட்டி, வீரமர சன்பேட்டை, கள்ளப்பெ ரம்பூர், திருக்கானூர் பட்டி, வடக்கு தஞ்சாவூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகள் ஏதும் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கலை வேந்தன் தெரிவித்துள்ளார்.

    ×